திடீரென குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
21 February 2025, 10:10 am

சென்னையில், இன்று (பிப்.21) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: பிப்ரவரி தொடங்கியது முதலே தங்கம் விலை ஏறுமுகத்திலே காணப்படுகிறது. கிராமுக்கு 8 ஆயிரம் ரூபாயைத் தாண்டி உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் 64 ஆயிரத்தை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

Gold rate today

இதன்படி, இன்று (பிப்.21) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 25 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 360 ரூபாய் குறைந்து 64 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: சொன்னபடி செய்த அண்ணாமலை.. திமுக ஐடி விங்கைத் தேடும் பாஜகவினர்!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 754 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 70 ஆயிரத்து 32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 109 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • five star creations report against dhanush viral on internet தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…