மலை உச்சியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. புகாரளிக்காமலே சுட்டுப் பிடித்த போலீசார்.. கிருஷ்ணகிரியில் நடந்தது என்ன?

Author: Hariharasudhan
22 February 2025, 11:25 am

கிருஷ்ணகிரி அருகே பெண்ணிடம் வழிப்பறி செய்து, பாலியல் தொல்லை அளித்த இருவரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் உள்ள மலைக்கு, கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில், திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 35 வயது ஆணும், 30 வயது மதிக்கத்தக்க பெண்ணும் சென்றுள்ளனர். அவர்கள் மலையின் உச்சிக்குச் சென்றபோது, அங்கு 4 இளைஞர்கள் மது போதையில் அமர்ந்திருந்துள்ளனர்.

இவ்வாறு மலை உச்சிக்கு தனியாக வந்த இருவரையும் கத்தி முனையில் மிரட்டிய அக்கும்பல், அந்தப் பெண்ணிடம் இருந்து தங்க நகைகளையும், பணத்தையும் பறித்துள்ளனர். பின்னர், அந்தக் கும்பலைச் சேர்ந்த இருவர், அந்தப் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணும், ஆணும் அழுதுகொண்டே மலையில் இருந்து இறங்கிவந்து, மலையடிவாரத்தில் இருந்த சிலரிடம் தங்களுக்கு நேர்ந்த்தைச் சொல்லிவிட்டு, போலீசில் புகார் அளிக்கமல் சென்றுவிட்டனர். இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி எஸ்பி தங்கதுரை, தனிப்படை அமைத்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டார்.

Woman sexual assault in Krishnagiri

தொடர்ந்து, கிருஷ்ணகிரி டவுன் மற்றும் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், பெண்ணை மிரட்டி பணம், நகை வழிப்பறி செய்தது, கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியைச் சேர்ந்த கலையரசன் (21), அபிஷேக் (20) என்பதும், அந்தப் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தது கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுரேஷ் (22) மற்றும் நாராயணன் (21) ஆகியோர் என்பம் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, கலையரசன், அபிஷேக் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவாக இருந்த சுரேஷ், நாராயணன் ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில், தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன்மலைகுட்டை பெருமாள் கோயில் பின்புறம் பதுக்கியிருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: மொட்டை கடிதம்.. கம்ப்யூட்டர் லேபில் அரங்கேறிய கொடூரம்.. அரசுப் பள்ளி ஆசிரியர் சிக்கியது எப்படி?

இதனைத் தொடர்ந்து, டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பிரபு, எஸ்ஐ பிரபாகர் மற்றும் காவலர்கள் குமார், விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்ற நிலையில், சுரேஷ், நாராயணன் ஆகியோர் தாங்கள் வைத்திருந்த கத்தியால் போலீசாரைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றுள்ளனர். அப்போது, அவர்களில் ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மற்றொருவருக்கு காலில் எலும்பு முறிந்தது.

தொடர்ந்து, துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட சுரேஷ், கால் முறிவு ஏற்பட்ட நாராயணன் ஆகியோரையும் மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!
  • Leave a Reply