‘NEEK’ எனக்கு ஹனிமூன் படம்…தனுஷை புகழ்ந்து கீர்த்தி சுரேஷ் பதிவு..!

Author: Selvan
22 February 2025, 7:00 pm

‘NEEK’ செம கியூட் படம்

நடிகர் தனுஷ் நடிப்பதை தாண்டி படங்களை இயக்கியும் வருகிறார்,அந்த வகையில் இவர் இயக்கி தயாரித்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் பெப்ரவரி 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இதையும் படியுங்க: வாடகை வீட்டில் ‘ஷாருகான்’…சொந்த வீட்டில் இருந்து வெளியே வர காரணம் என்ன.!

இப்படத்தில் தனுஷின் அக்கா மகனான பவிஷு ஹீரோவாக அறிமுக ஆகியுள்ளார்,அவர் கூடவே பல இளைஞர் பட்டாளங்கள் நடித்துள்ளனர்,வழக்கமான காதல் கதையை மையப்படுத்தி செல்லும் இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்,படத்தை பார்த்த பல திரைபிரபலங்களும் தனுஷை வாழ்த்தி வருகின்றனர்,தனுஷ் ஏற்கனவே பா.பாண்டி,ராயன் படத்தை இயக்கி வெற்றி கண்டவர்,

இந்த நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் அவருடைய கணவரோடு முதல் கப்புல்ஸ் படமாக தனுஷின் NEEK படத்தை பார்த்துள்ளார்,இதனால் தன்னுடைய X-தளத்தில் படம் பார்த்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் இதுபோன்ற கியூட் ஆன காதல் காட்சிகள் கொண்ட படத்தை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்ட்டது, தனுஷ் சாருக்கு ரொம்ப நன்றி,இப்படி ஒரு படத்தை நீங்கள் இயக்கியுள்ளது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது,பவிஷை பார்க்கு போது தனுஷை பார்ப்பது போல் உள்ளது,படக்குழு அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் படம் பார்க்கும் போது தனுஷை சந்திக்க வாய்ப்பு இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் பார்க்க முடியவில்லை என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

  • Gautam Karthik name change அதிரடியாக பெயரை மாற்றிய பிரபல நடிகர்..படத்தின் டீசரை கவனித்தீர்களா.!
  • Leave a Reply