நான் என்ன அவ்ளோ மோசமாகவா நடிக்கிறேன்…ராயன் பட நடிகர் வேதனை.!

Author: Selvan
22 February 2025, 8:02 pm

சந்தீப் கிஷனின் வேதனை

தமிழ் சினிமாவில் கிடைக்கின்ற வாய்ப்புகளில் நடித்து வருபவர் நடிகர் சந்தீப் கிஷன்,இவர் முதன்முதலில் தமிழில் யாருடா மகேஷ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

இதையும் படியுங்க: ‘NEEK’ எனக்கு ஹனிமூன் படம்…தனுஷை புகழ்ந்து கீர்த்தி சுரேஷ் பதிவு..!

மாநரகம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆன இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷின் ராயன் திரைப்படத்தில் தனுசுக்கு தம்பியாக நடித்து அசத்தியிருப்பார்,இந்த நிலையில் சந்தீப் கிஷன் சமீபத்திய அளித்துள்ள பேட்டியில் பட தயாரிப்பாளர்கள் யாரும் என்னுடன் பணியாற்ற விரும்பவில்லை என கூறியிருப்பார்,இந்த தகவல் தற்போது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Sundeep Kishan career struggles

மேலும் கடந்த வருடம் நான் நடிச்ச ராயன் திரைப்படம் எனக்கு நல்ல திருப்புமுனையை ஏற்படுத்தியது.தற்போது ஜேசன் சஞ்சயுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளேன்,இப்படி இருக்கையில் என்னுடைய இக்கட்டான சூழ்நிலையில் பல தயாரிப்பாளர்கள்,என்னை படத்தில் நடிக்க வைக்க தயங்கினார்கள்,எதற்காக என்னை அப்படி நடத்தினார்கள் என்று எனக்கு சுத்தமாக புரியவில்லை,இதனாலே எனக்கு பல பட வாய்ப்புகள் கை நழுவி சென்றன என அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.

தற்போது ஜேசன் சஞ்சய் படத்தில் நடித்து வரும் புது படத்திலும் லைக்கா நிறுவனம் படத்தை கை விட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது,இது சந்தீப் கிஷனின் சினிமா கரியரில் மேலும் ஒரு சரிவை ஏற்படுத்தும் என தெரிகிறது.

  • Gautam Karthik name change அதிரடியாக பெயரை மாற்றிய பிரபல நடிகர்..படத்தின் டீசரை கவனித்தீர்களா.!
  • Leave a Reply