துறவி பாதையை கையில் எடுத்த தமன்னா… மகா கும்பமேளாவில் நடந்த ட்விஸ்ட்.!

Author: Selvan
22 February 2025, 9:55 pm

கும்பமேளாவில் தமன்னா

தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பையா திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை தமன்னா,இந்த படத்தின் வெற்றின்மூலம் அடுத்தடுத்து படங்களில் நடித்து தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்.

இதையும் படியுங்க: அடிச்சு தூக்கு மாமே…’குட் பேட் அக்லி’ வைப் ஸ்டார்ட்..!

ஆனால் சில வருடமாக தமிழ் சினிமாவில் பெரிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த நிலையில்,தற்போது அக்கட தேசத்திற்கு படையெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தெலுங்கு பட இயக்குனர் அசோக் தேஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ஓடேலா-2 என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதனையொட்டி படத்தின் டீசரை படக்குழு உத்திரப்பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் வெளியிடப்படும் என அறிவித்திருந்தது,அதன் படி இன்று திருமேணி சங்கமத்தில் ஓடேலா-2 படத்தின் டீசர் வெளியிட்டு விழா நடைபெற்றது.

இதில் தமன்னா உட்பட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.இப்படத்தில் தமன்னா துறவியாக நடித்துள்ளார்,மேலும் இப்படம் பான் இந்திய அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Gautam Karthik name change அதிரடியாக பெயரை மாற்றிய பிரபல நடிகர்..படத்தின் டீசரை கவனித்தீர்களா.!
  • Leave a Reply