ஆதிக் படத்துல வர ரம்யா மாதிரியே.. விசு படத்துல வர உமாவை கவனிச்சிருக்கீங்களா? இதுதான் காரணம்!
Author: Udayachandran RadhaKrishnan24 February 2025, 12:59 pm
அஜித்தின் விடாமுயற்சி படம் சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு அடுத்த படமான GOOD BAD UGLY படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
குறிப்பாக GOOD BAD UGLY படத்தில் மீண்டும் அஜித்துடன் இணைந்து உள்ள திரிஷாவின் கதாபாத்திரத்தை படக்குழு அண்மையில் வெளியிட்டது. அதாவது ரம்யா என்ற கதாபாத்திரம் தான் அது. ஆதிக் ரவிச்சந்திரன் எப்போதும் தான் இயக்கும் படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தை பயன்படுத்துகிறார். அது ஏன் எதற்கு? என்ன காரணம் என்பது குறித்து அவர் இன்னும் விளக்கவில்லை என்ற பேச்சு சமூகவலைதளங்களில் தீயாய் பரவுகிறது.
ஆனால் அதற்கு முன்னரே, இயக்குநர் விசு தனது படங்களில் நடிக்கும் கதாநாயகிகளுக்கு உமா என்ற கதாபாத்திரத்தின் பெயரையே பயன்படுத்தியுள்ளார். சம்சாரம் அது மின்சாரம் படத்தில் லட்சுமி பெயர் உமா, பெண்மணி அவள் கண்மணி படத்தில் சீதா, திருமதி ஒரு வெகுமதியில் கல்பனா, சிதம்பர ரகசியத்தில் இளவரசியின் பெயர் உமா, புதிய சகாப்தத்தில் அம்பிகா என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இதற்கு என்ன காரணம் என்றால், விசு அவர்கள் ஒரு வார பத்திரிகையில் கதை எழுதுவதற்கு அணுகியுள்ளார், ஆனால் அந்த பத்திரிகை ஆசிரியர் விசுவை நிராகரித்துள்ளார்.
அந்த சமயம் அந்த பத்திரிகை அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்மணி ஒருவர், உங்கள் கதை வசனம் நன்றாக உள்ளது. நீங்கள் சினிமாவில் முயற்சி செய்தால் பெரிய இடத்துக்கு வர முடியும் என கூறியுள்ளார். இதைக் கேட்ட விசு, உங்க பெயர் என்ன என கேட்டுள்ளார். அந்த பெண் தான் உமா.
விசு திரைப்படங்களில் வரும் உமா யார் தெரியுமா?
— Theekkathir (@Theekkathir) February 23, 2025
Full Video : https://t.co/3FUrhyGZ91#Theekkathir | #bookfair | #TamilNadu pic.twitter.com/p7AtUB1ZcG
தன் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய அந்த உமா என்ற பெயரை தான் ஒவ்வொரு படங்களிலும் விசு பயன்படுத்தி வந்துள்ளார்.