ஒரு மாதத்திற்குள் OTT-க்கு தாவும் விடாமுயற்சி…தேதி குறிச்சாச்சு..!

Author: Selvan
24 February 2025, 4:34 pm

OTT-யில் விடாமுயற்சி

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்க: மணிமேகலை போட்ட போஸ்ட்…யாருக்கு செருப்படி..குவியும் வாழ்த்துக்கள்.!

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படம் பெப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வந்தது.இதில் அஜித்துடன் திரிஷா,அர்ஜுன்,ரெஜினா உட்பட பலர் நடித்துள்ளார்கள்,அனிருத் இசையமைத்த இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.மிகப்பெரிய பொருட்செலவில் உருவான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வசூலில் தடுமாறி வருகிறது.

18நாட்களை கடந்து திரையில் ஓடி வரும் விடாமுயற்சி படம் உலகளவில் இதுவரை 135.65 கோடி வசூலை பெற்றுள்ளதாக தகவல் வந்துள்ளது ,மேலும் நிறைய புது படங்களின் வருகையால் தற்போது படக்குழு OTT ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

அதன்படி விடாமுயற்சி திரைப்படம் வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி NETFLIX தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது,மேலும் படத்தை இந்தி,தெலுங்கு,கன்னடம்.மலையாளம் மொழிகளில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Vidamuyarchi total earnings worldwide போராடும் ‘விடாமுயற்சி’…இறுதி கட்டத்தை நோக்கி படத்தின் வசூல்.!
  • Leave a Reply