சம்பளம் பாக்கி வைத்தாரா தனுஷ்? காசு விஷயத்தில் காயப்படுத்திய எஸ்கே… பகீர் சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2025, 5:52 pm

சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியானது அமரன். மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு எகிறியது.

படமும் 100 நாட்களை கடந்து வெற்றி பெற்றது. சமீபத்தில் படத்தின 100வது நாள் வெற்றியை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், கமல் சார் சம்பளம் எனக்கு சீக்கிரம் வந்திருச்சு, ரொம்ப நன்றி. இதெல்லாம் நடப்பது ரொம்ப அரிதான விஷயம்.

இதையும் படியுங்க : பஞ்சு மூட்டை உன் மேல நான் தீய மூட்டவா? தின்ன வைக்கும் திவ்யபாரதி போட்டோஸ்!

இது அன்புச்செழியன் அண்ணாவுக்கு நல்ல தெரியும், முன்பெல்லாம் படம் ரிலீசுக்கு முன் பாதி நேரம் அண்ணனோட ஆபிஸ்ல தான் இருப்போன், சம்பளம் கொடுக்காமல் இருப்பது மட்டுமல்லாமல், சில நேரம் சம்ளத்தை திரும்பி வாங்கிட்டு போற ஆட்களும் உண்டு.

ஆனால் படம் ரிலீசாகும் ஆறுமாதம் முன்பே சம்பளம் கொடுத்து, அதையும் தாண்டி மரியாதை கொடுப்பது அரிதான விஷயம் என எஸ்கே பேசியது அவரை வைத்து படம் தயாரித்தவர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து பேசிய வலைப்பேச்சு அந்தணன், எஸ்கேவுக்கு சின்ன நடிகை போதும் என்று இருந்த சமயத்தில் ஹன்சிகாவை ஜோடியாக போட்டு அழகு பார்த்தவர் மதன். அவரை கூட மறந்துவிட்டார். சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்த லிஸ்டில் தனுசும் இருக்கிறார்.

Anthanan

பொத்தம் பொதுவா எஸ்கே இப்படி பேசுவது தயாரிப்பாளர்களை காயப்படுத்தியுள்ளது. முன்பு போல சங்கங்கள் எல்லாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்நேரம் சிவா மீது விசாரணை நடத்தியிருப்பார்கள்.

Sivakarthikeyan Insulted Actor Dhanush goes controversy

தற்போது எஸ்கேவுக்கு பின்னால் ஒரு பெரிய இடம் உள்ளதால், தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்து வாய்க்கு வந்ததை பேசுகிறார். அவர் வளர்ந்ததே மேடையில்தான் என்பதை மறந்துவிடக்கூடாது என கடுமையாக அந்தணன் கூறியுள்ளார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!