பாகிஸ்.கேப்டன் செய்த பிரார்த்தனை…கிண்டல் அடித்த ரெய்னா..வைரலாகும் வீடியோ.!
Author: Selvan24 February 2025, 8:22 pm
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான்
துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஷ்வான் பிரார்த்தனை செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்க: விதியை மீறிய கோலி..கண்டுக்காத பாகிஸ்.வீரர்கள்…இந்திய அணிக்கு அடித்த லக்.!
நேற்று(பெப்ரவரி 23) நடந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரன் குவிப்பில் தட்டு தடுமாறிக்கொண்டு இருந்தது.
அப்போது பெவிலியனில் இருந்த ரிஷ்வான் தன் கையில் ‘தஸ்பீஹ’ என்ற மாலையை வைத்துக்கொண்டு அதிஷ்டம் பாகிஸ்தான் அணி பக்கம் மாறுவதற்காக பிரார்த்தனை பண்ணிட்டு இருந்தார்.
Pakistanis are part time cricketers full time Maulanas😹😹😹😹#INDvsPAK pic.twitter.com/GJg4tvmw4R
— God (@Indic_God) February 23, 2025
அந்த நேரத்தில் கமண்டரியில் இருந்த சுரேஷ் ரெய்னா ரிஷ்வானின் இந்த செயலை பார்த்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் மகாமிர்துஞ்சய் என்ற மந்திரத்தை சொல்ல போகிறார் என்று கிண்டல் அடித்தார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது