பாஜக டூ தனிக்கட்சி.. பிரபல நடிகை திடீர் விலகல்.. காரணம் இதுவா?

Author: Hariharasudhan
25 February 2025, 11:56 am

பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சென்னை: இது தொடர்பாக பாஜக கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசப்பற்று மிகுந்த கட்சி, தேசியத்தை காக்கின்ற கட்சி, தெய்வ பக்தி கொண்ட கட்சி என்றெல்லாம் எண்ணித்தான், தேசியத்தையும் தெய்வீகத்தையும் கட்சிப் பணியாக செய்து கடமையாற்றி விடலாம் என கருதித்தான் இந்த கட்சியில் இணைந்தேன், இயங்கினேன்.

தேசியம் என்பதும், தெய்வீகம் என்பதும் நாடு முழுவதும் விரிவடைந்து நாட்டு மக்களுக்கு நன்மை பயக்காமல் ஒரு குறுகிய வட்டத்துக்குள் சுருங்கிப் போவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தாயகத்துடன் இணைந்த தமிழகம் என்பதை எண்ணித்தான் தேசிய இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்.

ஆனால் தாயகம் வேறு, தமிழகம் வேறு என்கிற மாற்றான் தாய் மனப்போக்கு என்னை இன்னமும் இங்கு இருக்க வேண்டுமா? என்கிற கேள்வியை எழுப்பியது. என்னைப் பொறுத்தவரை தாயகம் காக்கப்பட தமிழகம் சிறக்க வேண்டும், மும்மொழிக் கொள்கை திணிப்பு, திராவிடத்தின் மீதுள்ள வெறுப்பு, தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழகம் என்பதெல்லாம் ஒரு தமிழச்சியாக என்னால் ஏற்றுக்கொண்டு, உங்களுடன் இயங்க முடியவில்லை.

Ranjana Nachiyar Left from BJP

இதுவரை பாரதிய ஜனதா கட்சியில் வழங்கப்பட்ட எந்த பொறுப்பாக இருந்தாலும் அந்த பொறுப்பில் சிறப்பாகத்தான் நான் செயல்பட்டு இருக்கிறேன், ஆனால் என்னை சிறப்பாக இயக்க இந்த இயக்கம் தவறிவிட்டது. பெண்கள் அரசியல் ஆளுமைகளாக மாறுவது அரிதான காரியம், அரிதிலும் அரிதாக ஓரிருவர் முன்னேறினாலும் அந்த முன்னேற்றத்தை தடுத்து முட்டுக்கட்டை போடுவது என்பது பெண்களின் அரசியல் இருப்பை கேள்விக்குறியாக்குகிறது.

இதையும் படிங்க: ரூம் போட்டு சீமான் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டம்? தபெதிகவினர் மீது போலீசார் ஆக்‌ஷன்!

எனவே எனக்கென்று ஒரு இயக்கம், எனக்கென்று ஒரு கழகம், பெண்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை தரும் தலைமை, இனி இதுவே என் கடமை என்கிற பயணத்தை நோக்கி பயணிக்கத் துவங்கி விட்டேன், எனக்கு இதுவரை வாய்ப்பளித்தவர்களுக்கும் பதவியை வாரி தந்தவர்களுக்கும், என் வளர்ச்சிக்கும் என் முயற்சிக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து அனுசரித்து சென்றவர்களுக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன், நன்றியை நவில்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த ரஞ்சனா நாச்சியார்? பொறியியலில் எம்எஸ்சி, எம்.டெக் மற்றும் எல்எல்பி (ஹானர்ஸ்) போன்ற படிப்புகளை படித்து சினிமாவுக்குள் நுழைந்த ரஞ்சனா நாச்சியார், இயக்குநர் பாலாவின் உடன் பிறந்த அண்ணனின் மகள் ஆவார். துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாக அறிமுகமான ரஞ்சனா நாச்சியார், இரும்புத்திரை, அண்ணாத்த, டைரி, நட்பே துணை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

  • Producer Slams Dhanush Neek Movie இதெல்லாம் ஒரு படமா? தனுஷை வெளுத்து வாங்கிய விளாசிய பிரபல தயாரிப்பாளர்!
  • Leave a Reply