கையிலும் காலிலும் விலங்கா..? நிர்வாகிகள் விலகல்.. சீமான் காட்டமான பதில்!

Author: Hariharasudhan
25 February 2025, 5:02 pm

யாருடைய கையிலும், காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் அல்ல என நாதகவில் இருந்து நிர்வாகிகள் விலகுவது குறித்து சீமான் பதிலளித்துள்ளார்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில், இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தித் திணிப்பிற்கு எதிராக திமுக போராட்டம் நடத்தவில்லை, நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது. 60 வருடமாக நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

திமுக, காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துள்ளது. கட்டாய இந்தித் திணிப்பில் காங்கிரஸ் நிலைப்பாடு என்ன? என்னை மீறி முடிந்தால் இந்தி மொழியைத் திணித்துக் காட்டுங்கள். நாம் தமிழர் கட்சியில் நிர்வாகிகள் நீடிப்பது, வெளியேறுவதும் அவரவரதுச் சொந்த விருப்பம். இது ஒரு ஜனநாயக இயக்கம்.

விரும்பியவர்கள் கட்சிக்கு வருவார்கள், போவர்கள், இது குறித்து பேசிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது ஒரு செய்தியாக, ஒவ்வொரு முறையும் கேட்கிறீர்கள். நான் பதில் சொல்ல வேண்டியதிருக்கிறது, அதை விடுங்கள், இது என் கட்சி பிரச்னை.

NTK Seeman

கொள்கை மீது விருப்பம் உள்ளவர்கள் கட்சியில் பயணிப்பார்கள். வேறு ஒரு காரணம் இருக்கிறது என நினைத்தால் வெளியேறுவார்கள். யாருடைய கையிலும், காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் அல்ல. அதை விட்டுவிடுங்கள். முரண்பாடு உள்ளவர்கள் வெளியேறுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மக்களவைத் தொகுதி குறைப்பா? ஸ்டாலின் அழைப்பு.. அதிமுக, பாஜகவின் நிலைப்பாடு என்ன?

முன்னதாக, இன்று காலை நாதக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பாவேந்தன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நேற்று, நாதக மாநில மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், சமீப காலமாகவே சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நிர்வாகிகள் விலகி வருவது குறிப்பிடத்தக்கது.

  • Dragon Beat Vidaamuyarchi Movie Collection விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!
  • Leave a Reply