வெயிட்டிங்கே வெறி ஆகுதே…அலற விடும் ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட்.!

Author: Selvan
26 February 2025, 12:57 pm

குட் பேட் அக்லி டீசர் அப்டேட்

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் அப்டேட்டை படக்குழு ப்ரோமோவாக வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார்,இவர் தற்போது சினிமா மற்றும் கார் ரேஸ் என இரண்டு துறைகளிலும் கலக்கி வருகிறார்,அந்த வகையில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால்,கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது,இதனால் ரசிகர்கள் அனைவரும் அஜித்தின் மற்றொரு படமான குட் பேட் அக்லி படத்தை மிகவும் எதிர்பாத்து நம்பி இருக்கின்றனர்.

இதையும் படியுங்க: விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

மேலும் ஆதிக் தீவிர அஜித் ரசிகர் என்பதால் படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் ரசித்து எடுத்துள்ளார்,இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில்,தற்போது படத்தி டீசர் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு படத்தில் திரிஷா ‘ரம்யா’ கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர்,இந்த நிலையில் டீசர் அறிவிப்பு வீடியோவில் அஜித் மாஸாக நடந்து வர கூடிய காட்சிகளுடன் பெப்ரவரி 28ஆம் தேதி டீசர் வரும் மாமே என படக்குழு அறிவித்துள்ளது.

  • Mathampatti Rangaraj Secret Relationship Rumors நான் தான் முதல் பொண்டாட்டி…மாதம்பட்டி ரங்கராஜுக்கு போட்டி…வைரலாகும் இன்ஸ்டா பதிவு.!
  • Leave a Reply