பாசிச பாயாசம்.. அண்ணாமலையை விமர்சித்த விஜய்.. TVK Vijay full Speech!

Author: Hariharasudhan
26 February 2025, 1:43 pm

நிதியைக் கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை, வாங்க வேண்டியது இவர்களின் உரிமை என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

செங்கல்பட்டு: விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில், இன்று இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி, மாமல்லபுரம் அருகே ஈசிஆர் சாலையில் உள்ள ரிசார்ட்டில் நடைபெற்றது. இந்த விழாவில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

இதனையடுத்து, விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், “2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வரலாறு படைக்கும். 1967, 1977 போன்று 2026ஆம் ஆண்டும் மாற்றம் வரும். அரசியல் என்றாலே வேற லெவல்தான் இல்லையா.. அரசியலுக்கு, மக்களுக்குப் பிடித்தவர்கள் வந்தால் ஒரு சிலருக்கு எரிச்சல் வரும்.

நம்முடைய கட்சி பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது. நம் கட்சி எளிய, மக்களுக்கான கட்சி. பண்ணையார்கள்தான் கடந்த காலங்களில் பதவியில் இருப்பார்கள். தற்போது பதவியில் இருப்பவர்கள் பண்ணையார்களா மாறி விடுகிறார்கள்.

TVK Vijay

மக்களின் நலனைப் பற்றியோ, நாட்டின் நலனைப் பற்றியோ, வளர்ச்சியைப் பற்றியோ கவலை இல்லாமல், பணம் பணம் என்று திரியும் பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவதே நமது வேலை. தவெக, எந்தவொரு பெரிய கட்சிக்கும் சளைத்தது இல்லை. இப்போது ஒரு புதிதாக ஒரு பிரச்னையை கிளப்பிவிட்டுள்ளார்கள்.

அது, மும்மொழிக் கொள்கை. மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தாவிட்டால் கல்விக்கான நிதியை மாநில அரசுக்கு கொடுக்கமாட்டார்களாம். எல்கேஜி, யூகேஜி பசங்க சண்டை போடுவார்கள் இல்லையா, அதுபோல் இந்த விஷயத்தில் நடந்துகொள்கிறார்கள்.

நிதியைக் கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை. வாங்க வேண்டியது இவர்களின் உரிமை. ஆனால் இவர்கள் இருவரும், அதுதான் நமது பாசிசமும், பாயாசமும் பேசிவைத்துக் கொண்டு மாற்றி மாற்றி சோஷியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: வெயிட்டிங்கே வெறி ஆகுதே…அலற விடும் ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட்.!

இருவரும் அடித்துக் கொள்வது போல் அடித்துக் கொள்வார்களாம், அதை நாங்கள் நம்ப வேண்டுமாம். What Bro.. It’s very Wrong Bro. யார் சார் நீங்கள்? எல்லாம் எங்கே இருக்கிறீர்கள். இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பது மக்களுக்கு நனறாக தெரியும்.

தமிழகம் சுயமரியாதை உள்ள ஊர். நாம் எல்லோரையும் மதிப்போம். ஆனால் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டோம். எல்லா மொழிகளையும் மதிப்போம். அதில் மாற்றுக்கருத்து கிடையாது. தனிப்பட்ட மொழிகளை யார் வேண்டுமென்றாலும் படிக்கலாம். அது அவர்களது உரிமை” எனக் கூறினார்.

  • amazon prime bagged jana nayagan movie for 115 crores ஜனநாயகன் படம் தள்ளிப்போனதுக்கு இதுதான் காரணம்? ஓபனாக உடைத்து பேசிய பத்திரிக்கையாளர்…