நயன்தாராவை புகழ்ந்து பேசிய தனுஷ்.. ச்சே எவ்ளோ நல்ல மனசு!
Author: Udayachandran RadhaKrishnan26 February 2025, 5:07 pm
நல்ல நண்பர்களாக வலம் வந்த தமிழ் சினிமா நட்சத்திரங்களான தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே தற்போது கோர்ட்டில் கேஸ் நடத்தும் அளவுக்கு சென்றுள்ளது.
நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிக பிரம்மாண்டமாக நடந்து. குறிப்பாக பிரபலங்கள் மட்டும் பங்கேற்ற இந்த திருமண விழா வெளியுலகுக்கு தெரியாத வகையில் பல கட்டுப்பாடுகளுடன் நடந்தது.
இதையும் படியுங்க : ‘டிராகன்’ பட நடிகை போனில் அந்த மாதிரி மீம்..ஷாக் ஆன பிரதீப் ..நெட்டிசன்கள் விமர்சனம்.!
பின்னர் இதை வெளியுலகுக்கு கொண்டு வர நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் நயன்தாரா கைக்கோர்த்து விலை பேசி வீடியோவை வெளியிட முயற்சி செய்தார். ஆனால் சிக்கலே அங்கு தான் ஆரம்பித்தது. நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போதுதான் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது. அப்போது படப்பிடிப்பில் அவர்கள் ஜோடியாக சுற்றிய வீடியோ மற்றும் அப்படப்பாடலை தனுஷிடம் கேட்காமல் திருமண வீடியோவில் இணைத்தது பெரும் பஞ்சாயத்தாக மாறியது.
இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், நஷ்டஈடு கேட்டு தனுஷ் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் தனுஷ் நயன்தாராவை புகழ்ந்து பேசியது குறித்து செல்வராகவன் தற்போது கூறியுள்ளார்.
ஐயா படத்தில் நடித்த போது நயன்தாரா பெரிய நடிகையாக வலம் வருவார் என அன்றே நான் கணித்து என் தம்பி தனுஷிடம் கூறினேன். ஆனால் அவன் அப்போது அதை நம்பவில்லை.
பின்னர் யாரடி நீ மோகினி படத்தில் நடித்த போதுதான் நயன்தாரா சிறந்த நடிகை என தனுஷ் புகழ்ந்துள்ளார். என்னிடம் அவர்(நயன்தாரா) நடிப்பை பற்றி பேசினார் என செல்வராகவன் கூறியுள்ளார்.