ஷங்கரை கை கழுவிய லைக்கா…இந்தியன் 3 ரிலீஸ் ஆகுமா..தொடரும் சிக்கல்.!
Author: Selvan26 February 2025, 7:07 pm
இந்தியன் 3 பட ரிலீஸில் சிக்கல்
தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் இயக்குனர் ஷங்கர்,பிரபலமான நடிகர்களை வைத்து எப்போதும் மிகப்பெரிய பொருட்செலவில் படங்களை எடுத்து ஹிட் கொடுக்கும் இவருக்கு கடந்த வருடம் பெரும் இடியாக அமைந்தது.
இதையும் படியுங்க: மிரட்டும் டிராகன்…ஓடி ஒளியும் NEEK..படத்தின் 5 ஆம் நாள் வசூல் எப்படி.!
இவருடைய இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த இந்தியன் 2 படம் மிகப்பெரிய தோல்வி அடைந்ததோடு,லைக்கா நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.மேலும் தில் ராஜு இயக்கத்தில் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படமும் படு தோல்வி அடைந்தது,இதனால் ஷங்கரை வைத்து தயாரிப்பாளர்கள் படம் பண்ண தயங்கி வருகிறார்கள்.

மேலும் ஷங்கர் அதிக தொகை கேட்பதால் பல தயாரிப்பு நிறுவனங்கள் ஷங்கரை கைவிட்டு மற்ற இயக்குனர்களிடம் செல்கின்றனர்,இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் வெளியாகவுள்ள இந்தியன் 3 படத்தில் இருந்து லைக்கா நிறுவனம் வெளியேற உள்ளதாக தகவல் பேசப்பட்டு வருகிறது.
தற்போது இப்படத்தை ரெட் ஜியன்ட் மூவிஸ் நிறுவனத்தை சேர்ந்த செண்பக மூர்த்தி எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் இது குறித்து தீவிர ஆலோசனையில் படக்குழுவிடம் ஈடுபட்டு வருகிறார்,சில கண்டிசன்களையும் ஷங்கரிடம் போட்டுள்ளார், அதாவது இந்தியன்3 படத்தில் பாடல் காட்சிகள் இனி புதிதாக எடுக்க வேண்டாம் எனவும்,10 நாட்களில் படத்தை பேட்ச் ஒர்க் செய்து முடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் கமல் மற்றும் ஷங்கர் சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டும் அல்லது படம் ரிலீஸ் ஆன பிறகு ஷேர் முறையில் குறிப்பிட்ட தொகை பெறவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.