‘டிராகன்’ படத்தால் தெலுங்கு பட இயக்குனர் புலம்பல்…துரோகம் செய்தாரா அஸ்வத் மாரிமுத்து.!

Author: Selvan
27 February 2025, 5:27 pm

இயக்குனர் பிரசாந்த் நீல் படத்திற்கு சிக்கல்

இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் டிராகன்,இப்படத்தை ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கிருந்தார், ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து இருந்தது.

Dragon title controversy Tamil vs Telugu

கம்மி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே வசூலை குவித்து வருகிறது.உலகளவில் 50 கோடிக்கு மேல் வசூலை குவித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றும் வரும் நிலையில் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான பிரசாந்த் நீல் டிராகன் பட வெற்றியால் தற்போது கடும் அப்சட்டில் உள்ளார்.

இதையும் படியுங்க: இது என்ன பாத்ரூம்..கடுப்பான குத்துச்சண்டை நடிகை..இயக்குனர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.!

இவருடைய இயக்கத்தில் வெளிவந்த கேஜிஎப்,கேஜிஎப் 2 படம் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூலையும் குவித்தது,இப்படத்தின் வெற்றியால் அடுத்தடுத்து பல படங்களை இயக்கி வருகிறார்.

அந்த வகையில் தெலுங்கில் நடிகர் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்,இந்த படத்திற்கு இவர் வைத்துள்ள டைட்டில் டிராகன்.

Prashanth Neel upset over Dragon movie

ஆனால் அதே டைட்டிலில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் அஸ்வத் மாரிமுத்து படம் சக்கை போடு போட்டு வருவதால் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது பட தலைப்பை மாற்றும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது

  • Director Ameer connection to drug case இயக்குனர் ‘அமீர்’ சிக்குவாரா…ஜாபர் ஆதிக் போதைப் பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்.!
  • Leave a Reply