சப்தம் ஓங்கி ஒலித்ததா? SPECIAL SHOW பார்த்த பிரபலங்கள் கருத்து!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2025, 7:51 pm

மிருகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆதி. இவர் தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகராக வலம் வருகிறார். தமிழில், அரவான், ஈரம், மரகத நாணயம் போன்ற கதையுள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஈரம் படத்திற்கு பின் பல ஆண்டுகள் கழித்து இயக்நுர் அறிவழகன் ஆதியை வைத்து இயக்கிய படம்தான் சப்தம். சமீபத்தில் டிரெய்லர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

Sabtham Movie First Review

லட்சுமி மேன், சிம்ரன், லைலா உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். நாளை இந்த படம் உலகெங்கும் வெளியாகும் நிலையல் Special Show திரையிடப்பட்டுள்ளது.

இதை பார்த்தவர்கள் விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர். அதில் சப்தம் படத்திற்கு பெரும்பான்மையான வரவேற்பே கிடைத்துள்ளது. குறிப்பாக தமன் இசையும், ஆதி நடிப்பும் பேசப்பட்டுள்ளது.

இயக்குநர் அறிவழகனின் மேக்கிங் அருமை எனவும், சப்தம் தரமாக உள்ளதாக படம் பார்த்தவர்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர். உண்மை நிலவரம் என்ன என்பது நாளை படம் வெளியானதும் தெரிந்துகொள்ளலாம்.

  • Director Ameer connection to drug case இயக்குனர் ‘அமீர்’ சிக்குவாரா…ஜாபர் ஆதிக் போதைப் பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்.!
  • Leave a Reply