ரூ.8 ஆயிரத்துக்கு கீழ் சென்ற ஒரு கிராம் தங்கம்.. வெள்ளி விலையும் குறைவு!
Author: Hariharasudhan28 February 2025, 10:19 am
சென்னையில், இன்று (பிப்.28) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 50 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: பிப்ரவரி தொடங்கி, இறுதி வந்த நிலையிலும் தங்கம் விலை ஏறுமுகத்திலே காணப்பட்டது. இதனால், கிராமுக்கு 8 ஆயிரம் ரூபாயைத் தாண்டியும் உயர்ந்தது. இதனால், ஒரு சவரன் 64 ஆயிரத்தை தாண்டிச் சென்றது. ஆனால், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
இதன்படி, இன்று (பிப்.28) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 50 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து 63 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: 2 நாளுக்கு முன்னாடி கூட ஆள் அனுப்புனாரு சீமான்.. விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 683 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 69 ஆயிரத்து 464 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் குறைந்து 105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.