100 கோடியை நெருங்கும் ‘டிராகன்’…புகழின் உச்சியில் பிரதீப் ரங்கநாதன்.!
Author: Selvan28 February 2025, 1:04 pm
100 கோடியை குறிவைக்கும் டிராகன்
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான டிராகன் திரைப்படம் தியேட்டரில் தாறுமாறாக ஓடி வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் முதல் நாளில் இருந்தே தன்னுடைய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.
இதையும் படியுங்க: எனக்காக நீங்கள் அடிக்கும்.. கனவுக்கன்னி கயாடு வீடியோ பகிர்வு!
லவ் டுடே படத்தை தயாரித்த AGS நிறுவனம் தான் இந்தப் படத்தையும் எடுத்துள்ளது.இதனால் அடுத்தடுத்து இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.கல்லூரி மாணவனாக நடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதனை சுற்றி நடக்கும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் அனுபமா,கயேடு லோஹர்,மிஸ்கின் VJ சித்து உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஏற்கனவே ஓ மை கடவுளே என்ற காதல் படத்தை இயக்கி வெற்றி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து தற்போது டிராகன் படத்தில் அவருடைய கல்லூரி வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்துள்ளார்,மிகவும் எதார்த்தமான கதையாக இருப்பதால் ரசிகர்கள் பலர் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது,படம் வெளியாகி 7 நாட்களைக்கடந்துள்ள நிலையில்,வசூல் 80 கோடியை நெருங்கியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தெரிவிக்கிறது.
மேலும் தற்போதைக்கு பெரிய நடிகர்களின் படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகாமல் இருப்பதால் இனி வர கூடிய நாட்களிலும் டிராகன் படத்தின் வசூல் மின்னல் வேகத்தில் அதிகரித்து கூடிய விரைவில் 100 கோடியை எட்டும் என கூறப்படுகிறது.
மேலும் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் இன்னொரு படமான LIK படக்குழு,நேற்று டிராகன் பட வெற்றியை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார்கள்.