போடு மாமே…. GBU டீசர் இன்று ரிலீஸ்.. ஜிவி பிரகாஷ் போட்ட பதிவு : ரசிகர்கள் VIBE!
Author: Udayachandran RadhaKrishnan28 February 2025, 1:29 pm
சமீபத்தில அஜித் நடித்தி விடாமுயற்சி படம் தியேட்டரில் ரிலீசாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்த படமான குட் பேட் அக்லி படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதையும் படியுங்க: 100 கோடியை நெருங்கும் ‘டிராகன்’…புகழின் உச்சியில் பிரதீப் ரங்கநாதன்.!
இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க, திரிஷா, அர்ஜூன் தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். படம் ஏப்ரல் மாதம் ரிலீசாக உள்ளது.
குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்களை அடுத்தடுத்து படக்குழு வெளியிட்டு வரும் நிலையில், இன்று டீசர் ரிலீசாக உள்ளதாக படக்குழு நேற்று அறிவித்தது.
Aaaraaavaaramaaa aarambikkirom inniku maameyyyyyy 🔥🔥🔥 inniku namma addition into GBU world ❤️❤️❤️ thanks to the universe . pic.twitter.com/fCc1dA5VHf
— G.V.Prakash Kumar (@gvprakash) February 28, 2025
இன்று இரவு 7.03க்கு டீசர் வெளியாக உள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் பகிர்ந்த ட்வீட் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில், ஆரவாரமோ இன்னிக்கு ஆரம்பிக்கிறோம் மாமே…Aaaraaavaaramaaa aarambikkirom inniku maameyyyyyy 🔥🔥🔥 inniku namma addition into GBU world ❤️❤️❤️ thanks to the universe என பதிவிட்டுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.