விஜய் படத்துக்கு தடை… பகடைக்காயாகும் எஸ்கே : சினிமாவில் அரசியல் விளையாட்டு!
Author: Udayachandran RadhaKrishnan28 February 2025, 2:49 pm
நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதனால் தனது கட்சியை அறிவித்த விஜய், கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார்.
ஹெச் வினோத் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரியாமணி, நரேன், பாபி தியோல், பிரகாஷ்ராஜ் என நடிகர்கள் பட்டாளமே நடித்து வருகிறது. வரும் அக்டோபர் அல்லது பொங்கலுக்குள் படத்தை ரிலீஸ் செய்ய விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படியுங்க : ஒத்த மழைத்துளி பார்த்த இடம்.. பித்துக்குளி இவன் பாக்கலையே : Malavika Mohanan போட்டோஸ்!
இந்த நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி, அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகி வரும் படம் பராசக்தி.
இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள நிலையில் படத்தை டான் பிக்சர்ஸ் உடன் சேர்ந்து தயாரிக்கிறது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்.
இந்த படத்தை இந்த வருடத்திற்குள் முடிக்காவிட்டாலும் பொங்கலுக்கு பிறகு ரிலீஸ் செய்யலாம் என சிவகார்த்திகேயன் கூறி வருகிறார். ஆனால் ரெட் ஜெயண்ட் நிறுவனமோ படத்தை விஜய்யின் ஜனநாயகன் படத்துடன் மோத வைக்கும் குறியில் உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜனநாயகன் படத்தை அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் விஜய்யின் அரசியல் பணியால் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

இதையறிந்த சிவகார்த்திகயேன், ஜனநாயகன் ரிலீஸ் ஆன பின்பு இந்த படத்தை வெளியிட கூறியதாகவும், ஆனால் ஜனநாயகனோடு ரிலீஸ் செய்யவே ரெட் ஜெயண்ட் விரும்புவதாக கூறப்படுகிறது.
தயாரிப்பாளராக இருந்தும் சிவகார்திகேயனால் எதுவும் செய்ய முடியவில்லையாம். ஏற்கனவே டான் பிக்சர்ஸ் – ரெட் ஜெயண்ட் இணைந்து வெற்றிப் படங்களை குவித்து வருகிறது.

ஆனால் ரெட் ஜெயண்ட் எஸ்கே வை பகடைக்காயாக பயன்படுத்தி சினிமாவுக்குள் அரசியல் விளையாட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்…
