உங்களை நம்பி தான் இருக்கேன்..தியேட்டர் ஓனர்களுக்கு ‘சப்தம்’ பட இயக்குனர் வைத்த கோரிக்கை.!
Author: Selvan28 February 2025, 6:11 pm
கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.!
தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் இயக்குனர் அறிவழகன்.இப்படத்தில் ஹீரோவாக நடித்த ஆதியை வைத்து தற்போது இன்னொரு திரில்லர் படத்தை இயக்கி ரிலீஸ் செய்துள்ளார்.
இதையும் படியுங்க: இனிமேல் அது நடக்காது…காதல் குறித்து மனம் திறந்த சமந்தா.!
சப்தம் என்ற பெயரில் வெளிவந்துள்ள இப்படத்தை 7G FLIMS நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்தில் ஆதியுடன் இணைந்து லட்சுமிமேனன்,சிம்ரன்,லைலா ஆகியோர் நடித்துள்ளனர்.தமன் இசையில் உருவாகியுள்ள இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் அறிவழகன் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்,அந்த அறிக்கையில் “மதிப்புற்குரிய அனைத்து தியேட்டர் ஓனர்களுக்கும் வணக்கம்,இந்த படம் சப்தத்தை மையமாக வைத்து ஒரு நேச்சுரல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது,எனவே இதன் இசை,ஒலியமைப்பு ஆகியவை பார்வையாளர்களுக்கு இடையூறாக இருக்க கூடாது.
ஆகவே இந்த படத்திற்கான ஒலி அளவினை 6 முதல் 6.5 என்ற அளவாக குறைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,நீங்கள் வழக்கம் போல உள்ள அளவை பயன்படுத்தினால் அது ரொம்ப இரைச்சலாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
