ஆட்சியரின் முட்டாள்தனமான பேச்சுக்கு காரணமே முதலமைச்சர்தான்.. அண்ணாமலை கண்டனம்!
Author: Udayachandran RadhaKrishnan28 February 2025, 7:56 pm
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மகா பாரதி பேசும் போது, குழந்தை மீதும் தவறு உள்ளது. காலையில் அந்த குழந்தை அந்த பையன் மீது எச்சில் துப்பியுள்ளது.
நாம் இரண்டு பக்கமும் பார்க்க வேண்டும். பெற்றோர்கள் தான் குழந்தைக்கு நல்லது எது என சொல்லிக் கொடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இது சர்ச்சையாகி பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்க : விஜய்க்காக ரஜினி படத்தில் பழி வாங்கப்படும் பிரபல நடிகை? இதான் அந்த அப்டேட்டா!!
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, சீர்காழியில், மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து மயிலாடுதுறை ஆட்சியர், அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது என்று முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார். அவருக்கு, தமிழக பாஜக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெண்களும், பள்ளி மாணவிகளும், குழந்தைகளும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், முதலமைச்சரும், அமைச்சர்களும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோட்டு, அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டதன் தொடர்ச்சியே, மாவட்ட ஆட்சியரின் இந்த முட்டாள்தனமான பேச்சுக்குக் காரணம்.
சீர்காழியில், மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து மயிலாடுதுறை ஆட்சியர், அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது என்று முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார். அவருக்கு, @BJP4Tamilnadu சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்… pic.twitter.com/OxoZTiEyC4
— K.Annamalai (@annamalai_k) February 28, 2025
விளம்பர நாடகங்களை அரங்கேற்றி, தனக்குத்தானே பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கனவுலகில் சஞ்சரிக்கும் முதலமைச்சர் திரு. ஸ்டாலின், எப்போதுதான் இயல்பு நிலைக்கு வருவார்?