சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு? அதிரடி அறிவிப்பால் சோகத்தில் ரசிகர்கள்!
Author: Udayachandran RadhaKrishnan1 March 2025, 4:21 pm
சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அமிதாப் பச்சன். 1969ஆம் ஆண்டு முதல் திரைப்பயணத்தை தொடங்கிய அவர் 2026ல் வெளியாக உள்ள ராமாயணம் படம் வரை நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதையும் படியுங்க : உலகப் புகழ்பெற்ற பாடகருக்கு திடீர் முத்தம்…போலீஸ் கெடுபிடியில் பெண் ரசிகை.!
முதலில் ஹீரோவாக நடித்த அவர், இந்தியில் வெளியான சூர்யவம்சா படத்திற்கு பிறகு அப்பா, தாத்தா போன்ற கேரக்டர், சிறப்பு தோற்றம் போன்ற கதாபாத்திரத்தை ஏற்று வருகிறார்.
தமிழ், மலையாளம், கன்னடம், போஜ்புரி போற் மொழிகளிலும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான வேட்டையன் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார்.
இந்த நிலையில் அமிதாப் தனது X தளப்பக்கத்தில், செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் அமிதாப் சினிமாவை விட்டு விலக போவதை தான் இப்படி சொல்கிறார் என கூறி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ஆனால், இது குறித்து விளக்கம் அளித்த அமிதாப் பச்சன், நான் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பது படப்பிடிப்புக்காக செல்ல வேண்டியதை குறிப்பிட்டேன் என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஹப்பாடா என நிம்மதி பெருமூச்சு விட்டனர்.