மார்ச்சில் மாற்றமின்றி தங்கம் விலை.. வெள்ளி திடீர் உயர்வு!
Author: Hariharasudhan3 March 2025, 10:39 am
சென்னையில் இன்று (மார்ச் 3) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் மாற்றம் இல்லாமல் 7 ஆயிரத்து 940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை இறங்குமுகத்தில் காணப்படுகிறது. இருப்பினும் தங்கம் விலை, கிராமுக்கு 8 ஆயிரம் ரூபாயைத் தொடும் நிலையிலே காணப்படுகிறது. இதனால், ஒரு சவரன் 63 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஆனால், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
இதன்படி, இன்று (மார்ச் 3) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் மாற்றம் இல்லாமல் 7 ஆயிரத்து 940 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: மார்க்கெட்டே இல்லை…சுந்தர் சி-யிடம் சரணடைந்த வாரிசு நடிகர்.!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 662 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 69 ஆயிரத்து 296 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து 106 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.