அஜித்துக்காக தனுஷ் எடுக்க போகும் தரமான சம்பவம்…ஒருவேளை இருக்குமோ.!

Author: Selvan
3 March 2025, 4:47 pm

தனுஷ்-அஜித் கூட்டணி

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு தகவல் பரவி வருகிறது அதாவது, நடிகர் அஜித் குமார் தனது அடுத்த படத்தில் தனுஷின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பதாகும்.இது கோலிவுட் வட்டாரத்தில் தற்போது தீயாய் பரவி வருகிறது.

Ajith Kumar Dhanush Collaboration

தனுஷ், 2017ஆம் ஆண்டு பா.பாண்டி மூலம் இயக்குநராக அறிமுகமானார்.பின்னர், 2024ல் தன்னுடைய 50 வது படமான ராயன் படத்தை இயக்கி வெற்றிகண்டார்,சமீபத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கிய அவர், தற்போது “இட்லிக்கடை” படத்தை உருவாக்கி வருகிறார். முதலில் இப்படம் “குட் பேட் அக்லி” படத்துடன் போட்டியாக ஏப்ரல் 10ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தாலும், இப்போது அதிலிருந்து பின்வாங்கி இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

இதையும் படியுங்க: உதவி ஏன் கேக்குறீங்க..அத முதல்ல நிறுத்துங்க..யாரை தாக்குகிறார் இயக்குனர் செல்வராகவன்.!

இதற்க்கு காரணம் அஜித்தின் புதிய படத்தை தனுஷே இயக்க இருப்பதால்தான் என கூறப்படுகிறது.மேலும், இந்த பிரம்மாண்ட கூட்டணியில் அனிருத் இசையமைக்கிறார் மற்றும் படத்தை தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரிக்க உள்ளது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை,ஒருவேளை அஜித் தனுஷ் கூட்டணி இணைந்தால் கோலிவுட்டில் ஒரு தரமான சம்பவமாக இருக்கும் என பேசப்பட்டு வருகிறது.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?