ஊரையே காலி செய்கிறேன்.. திடீரென புறப்பட்ட பிரபலம்.. என்ன காரணம்?

Author: Hariharasudhan
6 March 2025, 9:00 am

பாலிவுட்டில் எதார்த்தம் இல்லை எனக் கூறியுள்ள அனுராக் காஷ்யப், விரைவில் மும்பையை காலி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மும்பை: இது தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப், ஆங்கில செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “பாலிவுட் திரையுலகம் டாக்சிக்காக மாறிவிட்டது. நான் அவர்களிடம் இருந்து தூர விலகியிருக்க விரும்புகிறேன். எதார்த்ததுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை நோக்கியே அவர்கள் நகர்கின்றனர்.

500, 800 கோடி ரூபாய் வசூல் படைக்கும் படங்களை எடுப்பதிலேயே அவர்கள் குறிக்கோளாக இருக்கிறார்களே தவிர, அழுத்தமான கதையம்சம் கொண்ட கிரியேட்டிவ் சூழல் இப்போது இல்லை. தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்களைப் பார்க்கும்போது எனக்கு பொறாமையாக உள்ளது.

இப்போது என்னால் பரிசோதனை சார்ந்த முயற்சிகளைக்கூட பாலிவுட்டில் மேற்கொள்ள முடியவில்லை. காரணம், தயாரிப்பாளர்கள் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்கள். நான் அவர்களிடம், உங்களுக்கு இப்படியான படங்களை எடுக்க வேண்டாம் என்று தோன்றினால் படங்களையே எடுக்காதீர்கள் என்று நான் கூறினேன்.

Anurag Kashyap

யார் இந்த அனுராக் காஷ்யப்? ஒரு படம் உருவாவதற்கு முன்பே, அதை எப்படி வியாபாரமாக்கப் போகிறோம் என சிந்திக்கின்றனர். அதனால் படம் இயக்குவதற்கான மகிழ்ச்சியே காணாமல் போகிறது. இதனால்தான் நான் முற்றிலுமாக பாலிவுட்டில் இருந்து விலகுகிறேன். விரைவில் மும்பையில் இருந்து வெளியேறுகிறேன்.

இதையும் படிங்க: நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!

சமீப காலமாக தென்னிந்திய சினிமாவில் இருந்துதான் எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. அவர்கள் என் மீது நிறைய அன்பு வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை நான் தமிழ்நாட்டிலோ அல்லது கேரளாவிலோ பிறந்திருந்தால், என் கரியர் இன்னும் நன்றாக இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இமைக்கா நொடிகள் படத்தின் தமிழில் அறிமுகமான அனுராக் காஷ்யப், 30 வருட காலமாக பாலிவுட்டில் இயக்கம் மற்றும் நடிப்பில் இருந்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மகாராஜா மற்றும் ரைஃபிள் கிளப் ஆகிய படங்களில் கவனம் பெற்றார். மேலும், அரசியல் மற்றும் சினிமா தொடர்பாக இவரது வெளிப்படையான பேச்சு சமீபத்தில் சர்ச்சையை உருவாக்கி வருகிறது.

  • Aamir Khan salary model 20 ஆண்டுகளாக சம்பளம் இல்லை…பாலிவுட்டில் அசத்தும் பிரபல நடிகர்.!
  • Leave a Reply