இது என்னுடைய கஷ்ட காலம்.!
நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பெற முடியாமல் தவித்து வருகிறார்.
இதையும் படியுங்க: உயிருக்கு போராடும் துள்ளுவதோ இளமை பட நடிகர்.. உதவி செய்வாரா தனுஷ்?
விஜய் நடித்த ‘கத்தி’ படத்தில் வில்லனாக அவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.அதன் பிறகு அவருக்கு தமிழ் திரைப்படங்களில் பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை.இது அவருக்கு மிகுந்த விரக்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், திரைப்பட வாய்ப்புகள் தேடுவதில் எதிர்கொள்ளும் சவால்களை பகிர்ந்துள்ளார்,ஒரு நடிகர் எப்போதும் நடிகரே,அவருக்கு சரியான நேரம் மற்றும் ஆதரவு தேவை,தினமும் புதிய வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வருகிறேன்,நிறைய பேருக்கு போன் செய்து நான் இருக்கிறேன் என்பதை நினைவுப்படுத்தி வருகிறேன்,ஆனால் பலரும் பதில் கூறாமல் தவிர்த்துவிடுகிறார்கள், என்று அவர் தெரிவித்துள்ளார்.
இவர் தொடர்ந்து பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவில் பல முயற்சிகளை செய்துவருகிறார்,தமிழ் சினிமாவில் பாலிவுட் வில்லன்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும்,அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வராமல் இருப்பது ஏமாற்றத்தையே ஏற்படுத்தி வருகிறது.