ஒரே இடத்தில் திமுக – பாஜகவினர் மாறி மாறி கோஷம்.. பரபரப்பில் சென்னை!

Author: Hariharasudhan
6 March 2025, 2:53 pm

சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது.

சென்னை: சென்னை, கோயம்பேட்டில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில், பாஜகவினர் பொதுமக்களிடம் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார், அனுமதி பெறாமல் கையெழுத்து போராட்டம் நடத்தக்கூடாது எனத் தெரிவித்தனர்.

இதனால் போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, போலீஸ் அதிகாரிகளிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “மக்களிடம் எங்களுடைய கோரிக்கையை எடுத்து வைத்து மும்மொழிக் கொள்கை தேவை என்பது குறித்து கையெழுத்து வாங்க இருக்கிறோம்.

பொதுமக்கள் பார்வையில் நாங்கள் செய்வது சரிதான். பாமர மக்களுக்கு மூன்று மொழி சொல்லிக் கொடுங்கள் என மிகவும் பொறுமையாகவும், அமைதியாகவும் கேட்க வந்திருக்கிறோம். நீங்கள் செய்வதை செய்துகொள்ளுங்கள். பொதுமக்களை பார்ப்பது தவறா?” எனக் கேள்வி எழுப்பினார்.

DMK Vs BJP

ஆனால், போலீசார் தொடர்ந்து பொதுமக்களிடம் கையெழுத்து பெறுவதை தடுத்ததால் பாஜகவினர், போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து, தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: அடடே! விரதம் இருந்த நயன்தாரா…கோலாகலமாக ஆரம்பித்த மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை.!

தொடர்ந்து, கைது செய்யப்பட்ட தமிழிசை சௌந்தராஜன் காவல் வாகனத்தில் ஏற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அங்கு வந்த திமுகவினர் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தடையை மீறி கையெழுத்து பெற்ற தமிழிசையைக் கைது செய்யவும் அவர்கள் வலியுறுத்தினர். இதனால் பரபரப்பு நிலவியது.

தமிழக பாஜகவின் கையெழுத்து இயக்கம்: மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக, தமிழக பாஜக சார்பில் ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் நேற்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. சென்னை அமைந்தகரையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்தக் கையெழுத்து இயக்கத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைத்தார். மேலும், சமக்கல்வி இணையதளம், சமக்கல்வி பாடல் ஆகியவையும் அறிமுகம்

  • Aadukalam movie casting controversy என்கூட நடிக்க மறுத்தார்..தனுஷ் செய்தது சரியா..வெளிப்படையாக பேசிய பார்த்திபன்.!
  • Leave a Reply