ஆணுறுப்பு அறுபட்ட நிலையில் கிடந்த நபர்.. திருநங்கையாகும் ஆசையில் மரணம்.. என்ன நடந்தது?

Author: Hariharasudhan
7 March 2025, 12:16 pm

தென்காசி அருகே பெண்ணாக மாற முயற்சித்து, சக திருநங்கைகளால் அறுவை சிகிச்சை செய்ய முற்பட்ட இளைஞர் உயிரிழந்துள்ளார்.

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அடுத்த குத்தப்பாஞ்சான் ஊராட்சி பரும்பு ஜேஜே நகரில் 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வாடகைக்கு வீடுகள் எடுத்து வசித்து வருகின்றனர். இவர்களுடன், சாத்தான்குளம் அடுத்த அரசர் குளத்தைச் சேர்ந்த சங்கர பாண்டி என்பவரின் மகன் சிவாஜி கணேசன் (32) என்பவர் சில மாதங்களுக்கு முன்பு வந்து இங்கு இருந்து வந்துள்ளதாகத் தெரிகிறது.

மேலும், தானும் திருநங்கையாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில், தனது பெயரை ஷைலு என மாற்றிக் கொண்டுள்ளார். இந்த நிலையில், ஷைலுவை சில திருநங்களைகள் ரத்த வெள்ளத்தில் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் நேற்று காலை அனுமதித்துள்ளனர். அப்போது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஷைலு ஏற்கனவே உயிரிழந்து விட்டாதக தெரிவித்துள்ளனர்.

பின்னர், இது குறித்து தகவலறிந்த ஆலங்குளம் மற்றும் கடையம் போலீசார் மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது, ஷைலுவின் பிறப்புறுப்பு அறுபட்ட நிலையில் ரத்தம் வெளியேறியபடி இறந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, ஷைலுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tenkasi Transgender issue

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கடையம் போலீசார் விசாரிக்கையில், முறைப்படியான பாலியல் மாற்று அறுவை சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவாகும் என்பதால், இங்கு வசிக்கும் திருநங்கைகளான மதுமிதா மற்றும் மகாலட்சுமி ஆகியோர் ஆணாக இருந்து திருநங்கைகளாக மாற விரும்புபவர்களுக்கு, மருத்துவ உபகரணங்களின்றி, இலவசமாகவே அறுவை சிகிச்சை செய்வார்கள் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: எம்ஜிஆர், ஜெ.,வுக்கு சேரும் கூட்டத்த பாத்திருக்கேன்.. ஆனா விஜய்க்கு வந்த கூட்டம் இருக்கே : பிரபலம் ஷாக்!

இதன்படி, சிவாஜி கணேசன் என்ற ஷைலுவுக்கும் அறுவை சிகிச்சை மேற்கொண்டதில், மகாலட்சுமி மருத்துவர் போலவும், மதுமிதா அவருக்கு உதவியாளராகவும் இருந்துள்ளார். மேலும், எந்தவித முன்னேற்பாடுகளும், மருத்துவ அறிவுமின்றி மேற்கொண்ட அறுவை சிகிச்சையில் ஷைலு, அதிக ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்ததும் தெரிய வந்தது.

ஷைலு உயிரிழந்தது தெரிய வந்ததும் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட உபகரணங்களை அதிகாலையில் எரித்து அழித்துள்ளனர். விடிந்த பின்னர் வேறு வழியின்றி உயிரிழந்த நபரை, ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு பைக்கிலேயே கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து மதுமிதா மற்றும் மகாலட்சுமி இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!
  • Leave a Reply