ஹனிமூனில் நட்சத்திர ஜோடி… குளிர் பிரதேசத்தில் குதூகலம் : வைரலாகும் போட்டோஸ்..!!

Author: Udayachandran RadhaKrishnan
7 March 2025, 4:50 pm

சமீபத்தில் திருமணம் செய்த நட்சத்திர ஜோடி ஒன்று நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

நாக சைதன்யா – சோபிதா நெதர்லாந்தில் தேனிலவு

சமந்தாவை பிரிந்த பிறகு நடிகர் நாக சைதன்யா – நடிகை சோபிதாவை காதலித்து இருவவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்தது.

இதையும் படியுங்க: ரயிலில் ஆண் பயணிக்கு முத்தம் கொடுக்க முயன்ற வாலிபர்.. வைரலாகும் ஷாக் வீடியோ!

அண்மையில் நாக சைதன்யா நடிப்பில் வெளியான தண்டேல் படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்துள்ளது. இதையடுத்து சோபிதா தனது கணவரின் நடிப்பை பாராட்டி பேசியிருந்தார்

Naga Chaitanya and Sobhita in Netherland

அது போல, நாகசைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகர்ஜூனா, மருமகள் வந்த நேரம் என குறிப்பிட்டு பேசியிருந்தார். இந்த நிலையில் இந்த ஜோடி தற்போது தான் ஹனிமூனுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதுவும் குளிர் பிரதேசமான நெதர்லாந்தில் தம்பதி சுற்றி திரியும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. சீக்கிரமே நல்ல செய்தியை சொல்ல போறாங்க..!

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?