சிறுமியை கட்டாய திருமணம் செய்ய பிரபல ரவுடி முயற்சி.. அரிவாளை காட்டி மிரட்டல்!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2025, 8:35 am

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் பகுதியை சேர்ந்த சகா என்ற சீனிவாசன் வயது 24. சரித்திர பதிவேடு குற்றவாளியான சகா மீது கொலை கொள்ளை கஞ்சா கடத்தி வந்து விற்பனை உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதையும் படியுங்க : கண்ணாடி உடைப்பு.. கம்பி தாண்டிய தவெகவினர்.. இஃப்தார் நிகழ்வில் விஜய்!

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி ஒருவரை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியை கட்டாய காதல் திருமணம் செய்ய முயற்சி கொண்டபோது, சிறுமியின் பெற்றோர்களுக்கும் சகாவிற்க்கும் தகராறு ஏற்பட்டது.

ஆவேசமடைந்த சகா என்ற சீனிவாசன் சிறுமியின் தந்தையை அருவாளால் வெட்ட முயற்சி செய்தபோது அவர் நூலிழையில் தப்பினார். சிறுமியின் தாயை காலால் எட்டி உதைத்து கொலை மிரட்டல் விடுத்து ‌அராஜகம் செய்துள்ளார்.

பெற்றோர்கள் அளித்த புகாரை தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் சரித்திர பதிவேடு குற்றவாளி சகா என்ற சீனிவாசனை மடக்கிப் பிடித்தனர்.

அவரிடம் இருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றி சகா என்ற சீனிவாசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Rowdy Arrest for Attempting Child Marriage

சரித்திர பதிவேடு குற்றவாளியான சகா என்ற சீனிவாசன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை கொள்ளை அடிதடி வழிப்பறி கஞ்சா உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் 18 வயது கூட பூர்த்தி அடையாத ஒரு சிறுமியை காதல் வசப்படுத்தி அந்த சிறுமியின் வாழ்க்கை கெடுக்க முயற்சித்து, அதை தடுக்க வந்த சிறுமியின் பெற்றோர்களையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சகா என்ற சீனிவாசன் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!