டேய் யாருடா நீங்களா..நான் ‘ரோஹித் ஷர்மாவின்’ காதலியா..கடுப்பான விஜய் பட நடிகை.!

Author: Selvan
8 March 2025, 6:04 pm

நடிகை காயத்ரி ரெட்டி ஷாக்

தமிழ் சினிமாவின் இளம் நடிகையான காயத்ரி ரெட்டி,சமீபத்தில் சமூக வலைதளங்களில் தன்னை இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் முன்னாள் காதலி என சிலர் விமர்சித்து வருவதால்,அதற்கு இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடிகர் விஜய்,அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் படத்தில்,கால்பந்தாட்ட வீராங்கனை மாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த காயத்ரி ரெட்டி,சமூக வலைதள ரசிகர்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்க: ‘சச்சின்’ ரீ-ரிலீஸில் புது பிளான்…ரெக்கார்ட் பிரேக் சம்பவம் உறுதி.!

காரணம்,ஐபிஎல் தொடக்கத்தில் இருந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையாளர் வெங்கட்ரமண ரெட்டியின் மகளின் பெயரும் காயத்ரி ரெட்டி தான்.ரோகித் சர்மா அந்த அணியில் விளையாடியதால்,ரசிகர்கள் நடிகை காயத்ரி ரெட்டியை,அந்த காயத்ரி ரெட்டியாகக் கருதி,அவரை ரோகித் சர்மாவின் முன்னாள் காதலி என விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

Rohit Sharma ex-girlfriend rumor

இதனால், நடிகை காயத்ரி ரெட்டி தனது இன்ஸ்டாகிராமில்,ரசிகர்கள் பதிவு செய்த கமெண்டுகளின் ஸ்கிரீன் ஷாட் பகிர்ந்து,”யாருடா நீங்க? நான் நிஷாந்த் ரெட்டியின் மனைவி,ரோகித் சர்மாவின் முன்னாள் காதலி கிடையாது” என தனது ஆதங்கத்தையும், தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீப காலமாக ரசிகர்களின் இந்த செயல் அதிகரித்துக்கொண்டே வருகிறது,துபாயில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது பிலிப்ஸ்,விராட் கோலி அடித்த பந்தை அற்புதமாக பறந்து பிடிப்பார்.

அப்போது இந்திய ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் பிலிப்ஸ் நிறுவனத்தின் பெயரை டேக் செய்து திட்டி வந்தார்கள்,அதே மாதிரி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கவர்த்தியை பாராட்டுவதற்கு பதிலாக பாலிவுட் ஆக்டர் வருண் தவானை மாற்றி டேக் செய்து பாராட்டி வந்தார்கள்,ரசிகர்களின் இந்த செயல்களால் சமூக வலைத்தளங்கள் முழுவதும் மீம் கண்டெண்ட்களாக நிரம்பி வருகிறது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?