கோப்பையை தூக்கி குப்பையில் வீசுங்கள்… முன்னாள் பாக்.,வீரர் சர்ச்சை பேச்சு.!

Author: Selvan
11 March 2025, 1:52 pm

இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி வெற்றி சர்ச்சை

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் தன்வீர் அகமது,இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றதை சர்ச்சைக்குள்ளாக்கும் வகையில் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்க: புற்றுநோயால் அவதிப்படும் பிரபல நடிகர்..விஜய்க்கு வைத்த முக்கிய கோரிக்கை.!

துபாய் மைதானம் வேண்டுமென்றே இந்தியாவுக்கு சாதகமாக தயாரிக்கப்பட்டதாகவும்,இதற்கு ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.மேலும்,இந்தியா தனது சாம்பியன்ஸ் டிராபியை குப்பைத் தொட்டியில் வீசவேண்டும் என்ற அதிர்ச்சிகரமான கருத்தையும் தெரிவித்துள்ளார்.

Pakistan Cricketer Criticizes India

கடந்த மார்ச் 9ம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி,நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாற்றுச் சாதனை படைத்தது.மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா,76 ரன்கள் விளாசி அணியை வெற்றிப் பாதையில் நடத்தினார்.

இந்த வெற்றிக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ள தன்வீர் அகமது,தனது யூடியூப் சேனலில்,இந்தியா துபாயில் நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றதற்குக் காரணம் மைதானத்தின் தன்மை என்று தெரிவித்துள்ளார்.ஜெய் ஷாவின் பங்களிப்பு இல்லாமல் இது நடந்திருக்காது என்றும்,அவர் மைதான அமைப்பை இந்திய அணிக்கே ஏற்றவாறு மாற்றியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியா தனது சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை குப்பைத் தொட்டியில் வீச வேண்டும் என்று கூறியதன் மூலம்,இந்திய ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளார்.

இந்திய ரசிகர்கள் தன்வீர் அகமது கருத்துகளை கடுமையாக எதிர்த்துள்ளனர். கிரிக்கெட் ஒரு திறந்தவெளி விளையாட்டு என்பதால்,வெற்றி அல்லது தோல்வி மைதானம் மட்டுமே தீர்மானிக்காது எனவும்,இது பாகிஸ்தான் அணியின் புறக்கணிப்பை மறைக்க வெளிப்படும் பொறாமை என்ற வகையிலான கருத்துக்களும் வலம் வருகின்றன.

  • D Imman latest interview என் போனை கொடுக்குறேன்..செக் பண்ணி பாத்துக்கோங்க…டி.இமான் ஓபன் டாக்.!
  • Leave a Reply