பிரேமலதாவுக்கு துணை முதலமைச்சர் பதவி? ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட அதிமுக? பரபரப்பு தகவல்!
Author: Udayachandran RadhaKrishnan11 March 2025, 1:27 pm
அரியலூர் மாவட்டம் செந்துறையில் தேமுதிகவின் 25 ஆம் ஆண்டு கொடி நாள் வெள்ளி விழா பொது கூட்டம் நடைபெற்றது. இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதையும் படியுங்க: வேலை கிடைக்காத கொடுமை.. குடும்பத்துடன் தற்கொலை செய்த கல்லூரி முன்னாள் விரிவுரையாளர்!
விஜயகாந்த் பாடலுக்கு கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் எழுந்து நடனம் ஆடினர். இதில் பேசிய தேமுதிக இளைஞர் அணி துணை செயலாளர் பால முருகன், அதிமுக -தேமுதிக என்ன ஒப்பந்தம் உள்ளது என்பது எங்களுக்கு தெரியும் ,2026ல் கூட்டணியில் உங்கள் கூட தான் இருப்போம்.
அந்த கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் பதவியை நம்மகுள்ளே பகிர்ந்து கொள்ளலாம் என இந்த அளவுக்கு பேசியுள்ளனர்.
இந்த அளவிற்கு இரண்டு கழக தொண்டர்களும் ஒன்றுமையாக உள்ளோம் என பேசினார். எங்கள் அன்னியார் இருக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என்று பேசினார்.