ஈஷாவில் அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா : ஆதியோகி முன்பு சிவனடியார்கள் புடைசூழ நடைபெற்றது!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2025, 5:38 pm

கோவை : ஈஷா ஆதியோகி வளாகத்தில் நடைபெற்று வந்த தமிழ்த் தெம்பு திருவிழாவின் நிறைவை முன்னிட்டு நேற்று (10/03/25) “அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா” நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஈஷாவில் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி துவங்கி மார்ச் 10 வரை மொத்தம் 12 நாட்கள் ‘தமிழ்த் தெம்பு – தமிழ் மண் திருவிழா’ கோலாகலமாக நடைபெற்றது. இதன் நிறைவு நாளான நேற்று ஆதியோகி முன்பு “அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா” நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆதியோகி முன்பு அறுபத்து மூன்று நாயன்மார்களையும் சிவனடியார்கள் பல்லக்கில் சுமந்து வந்து மேடையில் எழுந்தருளச் செய்யும் நிகழ்ச்சியும், ஆதியோகி உற்சவ மூர்த்தி எழுந்தருளலும் நடைபெற்றது. இதன் பின் தேவாரப் பாடல்களுடன் கைலாய வாத்தியம் முழங்க ஆதியோகியை சுற்றி அறுபத்து மூவர் உலாவும் இறுதியில் ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் ஆராதனையும் நடைபெற்றது.

இதில் பேரூரைச் சேர்ந்த ஓதுவார் மூர்த்திகள் கமலக்கண்ணன் மற்றும் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் தேவாரப் பாடல்களை பாடினர். இந்நிகழ்வில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு அறுபத்து மூவர் ஆராதனை பிரசாதம் வழங்கப்பட்டது.

Sixty Three Peoples Rise and walk in Isha

தென்கைலாய பக்தி பேரவையின் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் சிவயாத்திரையில் சிவாங்கா பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து கோவை ஈஷா மற்றும் வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். அதில் சென்னையில் இருந்து வரும் சிவனடியார்கள் குழு ஆதியோகி மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்களின் பஞ்சலோக திருமேனிகள் தாங்கிய தேரினை பாதயாத்திரையாக கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • GV Prakash latest interview நினைச்ச மாதிரி வரல…கடந்து போய் தான் ஆகணும்…ஜி வி பிரகாஷ் உருக்கம்.!
  • Leave a Reply