மனைவியின் தகாத உறவால் கணவர் கொலை.. விசாரணையில் வெளியான மற்றொரு சம்பவம்!

Author: Hariharasudhan
12 March 2025, 1:45 pm

சிவகாசியில், மனைவியின் தகாத உறவைத் தட்டிக் கேட்ட கணவர் கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள சிவகாமிபுரம் காலனியை சேர்ந்தவர்கள் கருப்பசாமி – கற்பகம் தம்பதி. இவர்களுக்கு 4 மற்றும் 2 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இதில், கருப்பசாமி பட்டாசு தொழிற்சாலையிலும், கற்பகம் அச்சகத்திலும் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இதனிடையே, கற்பகத்திற்கும், முருகன் காலனியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்த நிலையில், சமீபத்தில் இதனை அறிந்த கருப்பசாமி, மனைவி கற்பகம் மற்றும் மாரிமுத்துவைக் கண்டித்துள்ளார்.

மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பு, கருப்பசாமி மற்றும் மாரிமுத்து இருவரும் செல்போன் மூலம் பேசியபோது, இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் சமரசம் பேசிக் கொள்ளலாம் என, கடந்த மார்ச் 9ஆம் தேதி கருப்பசாமியை மாரிமுத்து போனில் அழைத்துள்ளார்.

Sivakasi Crime

இதன்படி சென்ற கருப்பசாமியை, சிவகாமிபுரம் காலனியிலிருந்து முருகன் காலனி செல்லும் வழியில் உள்ள தனியார் பட்டாசு ஆலைக்கு அருகே வைத்து வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதனையடுத்து, சம்பவம் குறித்து இரண்டு தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, பாறைப்பட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பதுங்கி இருந்த நான்கு பேரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், கருப்பசாமியைக் கொலை செய்தது மாரிமுத்து, அவரது சகோதரர் குமார், பட்டாசு ஆலை ஒப்பந்ததாரர் கணேசன் மற்றும் ஜோசப் ஆகிய 4 பேர் என்பது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: அதிமுக கோட்டையை வெல்ல வியூகம்? திமுக தலைமையால் திருப்பூருக்கு வந்த சோதனை!

மேலும், மாரிமுத்து பட்டாசு ஆலையில் பணிபுரியும் சக பெண் தொழிலாளர்களைக் காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் தொல்லை அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்லாமல், பட்டாசு ஆலை ஒப்பந்ததாரர் கணேசன் என்பவர் மீது ஏற்கனவே 5 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும், போனில் பேசியபோது கருப்பசாமி, மாரிமுத்துவை ஆபாசமாகப் பேசியதால் ஏற்பட்ட கோபத்தில் 4 பேரும் சேர்ந்து கருப்பசாமியைத் திட்டமிட்டு வரவழைத்துக் கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  • Jailer 2 Movie Update கேமியோ ரோலில் பிரபல தெலுங்கு நடிகர்..”ஜெயிலர் 2″ சம்பவம் லோடிங்.!
  • Leave a Reply