நினைச்ச மாதிரி வரல…கடந்து போய் தான் ஆகணும்…ஜி வி பிரகாஷ் உருக்கம்.!
Author: Selvan12 March 2025, 5:03 pm
“கடின உழைப்பே என் இலக்கு” – ஜி.வி.பிரகாஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளவர் ஜீ.வி.பிரகாஷ்.
இதையும் படியுங்க: என்ன நடக்குது…கண்டிப்பா தட்டி கேட்கனும்..இயக்குனர் மோகன் ஜி கொந்தளிப்பு.!
சமீபத்தில் இவர் நடித்த “கிங்ஸ்டன்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாத நிலையில்,அது குறித்து ஜீ.வி.பிரகாஷ் மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில்,”நான் சினிமா துறையில் 20 ஆண்டுகளாக இருக்கிறேன்.இந்த அனுபவம் எனக்கு பொறுப்பு, பதற்றம், அழுத்தம் ஆகியவற்றை சமாளிக்க பெரிதாக உதவியது.ஒரு படம் வெற்றி பெறுமா,தோல்வியடையுமா,எனது இசை ஹிட்டாகுமா இல்லையா என்பதை பற்றிக் கவலைப்படாமல் நான் கடினமாக உழைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கிறேன்”என்று தெரிவித்தார்.
மேலும்,”கதையின் தேவைக்கு ஏற்ப இசையமைக்கிறேன்.வித்தியாசமான இசை தேவையான சமயங்களில்,அதற்கு தேவையான மாற்றங்களை செய்து,முயற்சி செய்வதில் எனக்கு மகிழ்ச்சி.நான் கிங்ஸ்டன் படத்தில் நடித்தேன்,இசையமைத்தேன், தயாரித்தும் இருக்கிறேன்,அது எதிர்பார்த்த அளவுக்கு சென்றதில்லை,ஆனால், அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை,ஏனென்றால்,நான் புதிய விஷயங்களை எப்போதும் கற்றுக்கொண்டு செல்ல விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
