இயக்குநராகும் SK பட வில்லன்.. ஹீரோ இவரா? அதிர்ச்சியில் கோலிவுட்!

Author: Hariharasudhan
13 March 2025, 9:39 am

ரவிமோகன் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், அப்படத்தில் யோகி பாபு மெயின் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: இயக்குநராக அறிமுகமாக முடிவு செய்துள்ளார் நடிகர் ரவி மோகன். இதற்காக தான் நடித்து வரும் பராசக்தி மற்றும் கராத்தே பாபு படங்களின் படப்பிடிப்புக்கு இடையே திரைக்கதை அமைக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இவ்வாறு தான் இயக்க உள்ள படத்தை அவரே தயாரித்து, இயக்கவும் முடிவு செய்துள்ளாராம். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ள இந்தப் படத்தின் நாயகனாக யோகி பாபு நடிக்கவுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு, பல பேட்டிகளில் இயக்குநராகும் ஆசை குறித்து பேசியிருக்கும் ரவி மோகன், அதில் யோகி பாபு நடிப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, ரவி மோகன் இயக்கும் படத்தில் யோகிபாபு நிச்சயமாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கோமாளி, காதலிக்க நேரமில்லை மற்றும் சைரன் ஆகிய படங்களில் யோகி பாபு உடன் ரவி மோகன் நடித்திருந்தார்.

Ravi Mohan debut Direction

ரவி மோகன் Projects: இதில், கோமாளி படத்தில் ரவி மோகன் – யோகி பாபு காம்போ ஹிட் ஆனது. ரவி மோகன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்து வரும் பராசக்தி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், இயக்குநர் கணேஷ் பாபு இயக்கி வரும் கராத்தே பாபு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: தமிழகத்திலும் ரூ.1,000 கோடி மதுபான ஊழல்.. அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

தவுத்தி ஜிவால் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தின் அரசியல் கலந்த டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. முன்னதாக, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன், நித்யா மேனன் நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது.

  • Bharatha movie Samantha cameo ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!முக்கிய ஹீரோயினுடன் கேமியோ ரோலில் நடிக்கும் சமந்தா.!
  • Leave a Reply