பிச்சை கூட எடுப்பேன்..அவர் கூட நடிக்க மாட்டேன்..நடிகை சோனா அட்டாக்.!

Author: Selvan
13 March 2025, 5:55 pm

வடிவேலுக்கும் சோனாவுக்கும் இடையே என்ன பிரச்சனை

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகையாக மற்றும் வில்லி கதாபாத்திரங்களில் நடித்திருந்தவர் நடிகை சோனா.

2001-ம் ஆண்டு அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் படம் மூலம் அறிமுகமான இவர்,விஜய்யுடன் ஷாஜகான் உள்ளிட்ட தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்க: சாய் பல்லவிக்கு வந்த சோதனை…ஓடிடி-யில் பரிதவிக்கும் “தண்டேல்”.!

மேலும், சில்லுனு ஒரு காதல், அபி டெய்லர், ரோஜா, மாரி உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.சமீபத்தில் பிகைண்ட் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர் நடிகர் வடிவேலுவுடன் நடிப்பது குறித்து பேசினார்.

Sona refuses to act with Vadivelu

முதலில் விவேக்குடன் நடித்த அனுபவம் குறித்து கேட்டபோது,குரு என் ஆளு படத்தில் விவேக்குடன் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சிரித்துக்கொண்டே நடித்தேன்.மிகச்சிறந்த அனுபவம் என்று கூறினார்.

அதன்பிறகு வடிவேலுவுடன் நடித்த குசேலன் படத்துக்குரிய அனுபவத்தை பற்றி கேட்டபோது,அது ரஜினி சார் படம், சிறப்பாக இருந்தது என்று மட்டும் கூறினார்.

தொடர்ந்து வற்புறுத்தியபோது,இப்போது வடிவேலுவுடன் நடித்தவர்கள் எல்லாரும் அவரைப் பற்றி பல வித குற்றசாட்டுகளை முன்வைக்கிறார்கள்,ஆனால் நான் அவரை பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை என கூறி,குசேலன் படத்திற்கு பிறகு அவருடன் நடிக்க 16 பட வாய்ப்புகள் வந்தது.

ஆனால் நான் ஒப்புக்கொள்ளவில்லை,கோடி ரூபாய் கொடுத்தாலும்,வடிவேலுவுடன் நடிக்க மாட்டேன் பிச்சை எடுத்து சாப்பிட்டாலும் சாப்பிடுவேனே தவிர,அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று தன்னுடைய நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்துள்ளார்.

இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், வடிவேலுவுடன் என்ன நடந்தது? ஏன் சோனா இவ்வாறு கூறுகிறார்? என்பது குறித்து விவாதங்கள் எழுந்து வருகின்றன.

  • Actress Sneha has a rare disease.. Prasanna praises her courage! நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்.. தைரியத்தை பாராட்டும் பிரசன்னா!
  • Leave a Reply