செல்போன் கடையில் பணம் கேட்டு திமுகவினர் மிரட்டல்.. அமைச்சர் பெயரை சொல்லி அடாவடி!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2025, 12:56 pm

விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் செயல்பட்டு செயல்படும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்படும் கடையில் திமுகவை சார்ந்த மூன்று பேர் அமைச்சர் பொன்முடி ஜி ஆர் பி தெருவில் நாளை நீர் மோர் பந்தல் திறக்க உள்ளதால் அவ்விழாவிற்கு செலவு செய்ய செல்போன் கடைக்கு சென்று பணம் கேட்டுள்ளனர்.

இதையும் படியுங்க: வீட்டு வாசலில் காத்திருந்த இஸ்லாமியர் சுட்டுக்கொலை ; பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

சசிந்திரன் என்பவர் பணம் கேட்டபோது கடையின் உரிமையாளர் இல்லாததால் கடையில் பணிபுரியும் பணியாளரிடம் அமைச்சர், மாவட்டசெயலாளர், எம் எல் ஏ கலந்து கொண்டு நீர் மோர் திறப்பதால் கட்டாயம் பணம் கொடுத்து தான் ஆகவேண்டும் இல்லையெனில் கடையினை மற்றொரு பூட்டினை போட்டு பூட்டுவேன் என கரை வேட்டி அணியாத நபர் தெரிவிக்கிறார்.

DMK members threaten to demand money at a cell phone shop insult the minister by name

அப்போது திமுக கரை வேட்டி இரு நபர்கள் கொடுத்துடுங்கள் பா கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றனர்.

இந்த காட்சிகள் கடையிலிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

  • Ranya Rao Gold Smuggling case 27 தடவை..தங்க கடத்தலுக்கு உதவியது யார்? அதிகாரிகளை திணறடித்த நடிகை ரன்யா ராவ்.!
  • Leave a Reply