வரும் 2026 தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் தமிழக பட்ஜெட் : ஹெச் ராஜா கிண்டல்!
Author: Udayachandran RadhaKrishnan15 March 2025, 2:31 pm
திருச்சி, பாஜக மாவட்ட அலுவலகத்தில் டாஸ்மாக் துறையில் நடந்த ஊழல் குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சென்ற வாரம் மூன்று இடங்களில் அமலாக்க துறையின் ரெய்டு நடந்தது. அலுவலகத்தில் சோதனை நடந்தது ஆச்சரியத்தை உண்டாக்கி உள்ளது.
கூடுதல் விலையில் மது விற்பனை, டாஸ்மாக் பணியாளர் நியமனம் பணியிட மாற்றம் உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு செய்தது தெரிய வந்ததன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது.
இதையும் படியுங்க : லஞ்சம் வாங்கிய விஏஓ… துரத்திய போலீஸ்.. கைதுக்கு பயந்து குளத்தில் குதித்து தப்பியோட்டம்!
100 சதவீதம் ஊழல் நடந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்தது உறுதியாகி உள்ளது. இரண்டு லட்சம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இதனை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. டெல்லி, சட்டீஸ்கர், தெலுங்கானாவை விட தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் பலமடங்கு கூடுதலாக இருக்கும் இதை உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பாஜக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி போராடி வருகிறது. மத்திய அரசுக்கு வரி செலுத்த மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் கூற தைரியம் உள்ளதா?
பாஜக ஆட்சியில் ரூ12000 செலவில் கழிப்பறை கட்டப்பட்டது. ஆனால் சென்னை கார்ப்பரேஷன் ஒரு கழிப்பறை கட்ட 1 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. திமுக ஆட்சியை தூக்கி எறியாமல் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.

இந்த ஊழல்கள் அனைத்தும் திமுக தலைமைக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பது என் யூகம். கடந்த 2006 ஆம் ஆண்டில் தமிழகத்தின் கடன் தொகை ரூ 26000 கோடியாக இருந்தது.ஆனால் தற்போது அது 9.26 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வித்துறையில் அரசியல் செய்கிறார். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 60 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு 15ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது .

ஆனாலும் தனியார் பள்ளி கல்வி தரம் அரசு பள்ளிகளை விட நன்றாக உள்ளது. சேலத்தில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பதிவிட்டதால் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசின் பட்ஜெட் , திமுகவின் 2026 தேர்தல் அறிக்கை என தெரிவித்தார்.
