நீ இந்தியாவுக்கு வந்த அவ்வளவு தான்…தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு மிரட்டல்.!
Author: Selvan15 March 2025, 7:48 pm
உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு நேர்ந்த கொடுமை!
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி,2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்டபோது ஏற்பட்ட சிரமங்களைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்க: 27 தடவை..தங்க கடத்தலுக்கு உதவியது யார்? அதிகாரிகளை திணறடித்த நடிகை ரன்யா ராவ்.!
2021ல் துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி பெரும் தோல்வி கண்டது,குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது,அந்தப் போட்டியில் பந்துவீசிய வருண் சக்ரவர்த்தி எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை,இதனால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்,இந்த சூழலில் சிலர் அவருக்கு மிரட்டல் விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு யூடியூப் நிகழ்ச்சியில் பேசிய அவர்,”அந்த நேரம் எனக்கு மிகவும் கடினமானது,உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்யப்பட்ட மகிழ்ச்சி இருந்தாலும்,என்னால் சரியாக விளையாட முடியவில்லை,விக்கெட்டுகள் எடுக்க முடியாததால் மன அழுத்தம் ஏற்பட்டது.
இந்தியா தோல்வி அடைந்த பிறகு சிலர் மிரட்டல் அழைப்புகள் கொடுத்தனர்,என்னை பலரும் இந்தியா வரக்கூடாது என கோஷங்களை எழுப்பினார்கள்,விமானநிலையத்தில் இருந்து காரில் வீடிற்கு வரும் போது சிலர் என்னை பின்தொடர்ந்து வந்தார்கள்,சிலர் நேரடியாக என் வீட்டிற்கு வந்தார்கள்,அவர்களை தவிர்க்க சில நேரங்களில் ஒளிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.ஆனால் இப்போது கிடைக்கும் பாராட்டுகளால் மகிழ்ச்சி அடைகிறேன்,”என்று கூறினார்.
இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க,கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக விளையாடி தனது பயிற்சி முறையையும், தினசரி பழக்கவழக்கங்களையும் மாற்றி,அதிக உழைப்புடன் அணிக்கு திரும்ப வந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.