படத்தோட பேரு தெரியாம நடிச்சேன்.. ‘பெருசு’ பொருத்தமான தலைப்பு.. ரசிகர்களுடன் படம் பார்த்த நடிகர் பேட்டி!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2025, 7:43 pm

பெருசு டைட்டில் படத்திற்கு சரியான தலைப்பு இயக்குனர் வைத்துள்ளார் என திருச்சியில் நடிகர் பாலசரவணன் கூறியுள்ளார்.

ஸ்டோன் பீச் பிலிம்ஸ், பெர்வாஜ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இளங்கோராம் இயக்கத்தில் பெருசு திரைப்படம் தமிழக முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இத்திரைப்படத்தின் நடிகர் பாலசரவணன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் திரைப்படத்தை பார்த்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பெருசு திரைப்படம் திரையிடப்பட்ட இடமெல்லாம் வெற்றி பெற ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லாருடைய ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது.

ரசிகர்களுடன் படம் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மிகவும் ரசித்து திரைப்படத்தை கண்டனர். திரைப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் மிக அருமையாக படத்தை தயாரித்துள்ளனர்.

இது ஒரு குடும்ப திரைப்படம் திரைப்படத்தின் நகைச்சுவை மிகவும் ரசித்து கண்டனர். திரைப்படம் ஓடும் எல்லா இடத்திலும் ரசிகர்கள் முகம் சுளிக்கும்படியான ஒரு நகைச்சுவை கிடையாது. சிறப்பான வெற்றி அடைந்துள்ளது.

வெற்றியை கொடுத்த மக்களுக்கும் இதை கொண்டு போய் சேர்த்த பத்திரிகையாளர்களுக்கும் எல்லோருக்கும் நன்றி. Instagram மூலமாகவும், ட்விட்டர் மூலமாக பேஸ்புக் மூலமாக சிறப்பாக படம் சேர்ந்துள்ளது. எல்லாத்துக்கும் மனமார்ந்த நன்றி.

படத்தில் நடித்த எல்லாருக்கும் மிகவும் சந்தோஷம் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் மிகுந்த சந்தோஷம். தற்போது 7 படங்கள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏழு படம் தற்போது தயாரிப்பில் உள்ளது.

திருச்சியில் சூரி நடிப்பில் தயாரிக்கப்பட்டு வரும் மாமன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தில் ராஜ்கிரன், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். நானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன்.
அடுத்து நயன்தாராவின் மண்ணாங்கட்டி படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

தொடர்ந்து உழைப்பை கொடுத்துக்கொண்டு முயற்சி செய்து கொண்டிருந்தால் வாய்ப்புகள் வரும், நாங்கள் அப்போது புகைப்படத்தை கொடுத்து வாய்ப்புகளை தேடி வந்தோம். ஆனால், இன்று நிறைய அப்டேட் ஆகி உள்ளது. இன்ஸ்டாகிராம் மூலமாக தங்களது திறமை இருக்கிறது என்பதை பார்க்க வைக்கின்றனர்.

Actor Bala Saravanan Share About Perusu Movie

படம் ஆரம்பிக்கும் பொழுது இந்த படத்தின் டைட்டில் எனக்கு கூறவில்லை. ஆனால், சூட்டிங்கில் மிகவும் நகைச்சுவையாக இருக்கும், படம் எடுத்த பின்னர் தான் இயக்குனர் இந்த படத்திற்கு பெருசு என்று பெயர் வைத்துள்ளதாக கூறினார்.
இது சரியான டைட்டில் என தெரிவித்தார்.

  • ‘பவுன்டரி டூ பாக்ஸ் ஆபிஸ்’..மிரட்டும் வார்னர்..ராபின்ஹுட் படத்தின் ரிலீஸ் தேதி லாக்.!
  • Leave a Reply