‘பவுன்டரி டூ பாக்ஸ் ஆபிஸ்’..மிரட்டும் வார்னர்..ராபின்ஹுட் படத்தின் ரிலீஸ் தேதி லாக்.!

Author: Selvan
15 March 2025, 9:14 pm

‘ராபின்ஹுட்’ படத்தில் வார்னரின் சிறப்புத் தோற்றம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்,இந்திய ரசிகர்களிடையே அதிக ஆதரவு பெற்றுள்ள ஒரு பிரபலமான கிரிக்கெட் நட்சத்திரம் ஆவார்.மேலும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது இந்திய திரைப்படங்களின் வசனங்கள் மற்றும் பாடலுக்கு ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதையும் படியுங்க: நீ இந்தியாவுக்கு வந்த அவ்வளவு தான்…தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு மிரட்டல்.!

இதற்கிடையில், ‘புஷ்பா 2’ திரைப்படத்தில் வார்னர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக வதந்திகள் வெளியானது.ஆனால் அது வெறும் வதந்தியாகவே இருந்து, தற்போது அவர் ‘ராபின்ஹுட்’ என்ற திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகில் அறிமுகமாக இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் நிதின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ராபின்ஹுட்’ திரைப்படத்தில், டேவிட் வார்னர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தில் நடிகை ஸ்ரீ லீலா கதாநாயகியாகவும்,பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பாளராகவும் உள்ளனர்.இந்த நிலையில் தற்போது படக்குழு வார்னரின் போஸ்டரை வெளியிட்டு படம் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் இந்திய ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

  • தனுசுக்கு கதை ரெடி…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த சுவாரசிய அப்டேட்.!
  • Leave a Reply