ஏ.ஆர்.ரகுமானின் உடல்நிலை
உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரும்,ஆஸ்கர் விருதாளருமான ஏ.ஆர்.ரகுமான் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படியுங்க: ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி..அதிர்ச்சியில் திரையுலகம்.!
இதனை தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட்டு,ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியானது.இதனால் அவரது ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் அனைவரும் ஆறுதல் தெரிவித்து,விரைவில் மீண்டு வர வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில்,ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன்,சமூக ஊடகத்தில் ரகுமானுடைய உண்மையான தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் அவர் “எனது தந்தை ஏ.ஆர்.ரகுமான் நீரிழிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தற்போது அவர் நலமாக உள்ளார்,விரைவில் வீடு திரும்பவுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.”
அத்துடன்,மருத்துவ அறிக்கையையும் பகிர்ந்துள்ள ஏ.ஆர். அமீன் “எங்கள் குடும்பத்தினருக்கு அன்பும் ஆதரவும் வழங்கிய நண்பர்கள்,ரசிகர்கள் மற்றும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.
All is well with @arrahman ♥️
— MovieCrow (@MovieCrow) March 16, 2025
It’s dehydration symptoms and after routine checkup he is discharged now. #ArRahman pic.twitter.com/60mSx9cfjz
இந்த தகவலால் ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.