ரூ.500 கோடி வசூல்.. குட் பேட் அக்லி செய்யப் போகும் சாதனை!
Author: Udayachandran RadhaKrishnan17 March 2025, 3:36 pm
அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படம் படுதோல்வியடைந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் அடுத்த படமான குட் பேட் அக்லியை எதிர்பார்த்தனர்.
இதையும் படியுங்க : நடிகர் மம்மூட்டிக்கு கேன்சர்? நடிப்பதில் இருந்து விலகல்? மலையாள சினிமாவில் பரபரப்பு..!!!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படம் படு ஸ்பீடாக படப்பிடிப்பு நடந்து முடிந்தது. மேலும் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியானதால் ரசிகர்கள் உச்சக்கட்ட வரவேற்பை அளித்தனர்.
சமீபத்தில் டீசர் வெளியாகி மாஸ் வரவேற்பை பெற்றது. இப்படி குட் பேட் அக்லி படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், படக்குழு படத்தில் நிறைய சஸ்பென்சை வைத்துள்ளது.

குறிப்பாக படத்தில் முக்கிய ரோலில் பிரபலம் நடிக்க உள்ளதாகவும், அவர் அஜித்தின் தீவிர ரசிகர் என்றும் கூறப்படுகிறது. இப்படி ஒரு சஸ்பென்சை படக்குழு ஏற்படுத்திய நிலையில், படத்தின் பட்ஜெட் 250 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.
ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி படம் வெளியாகும் நிலையில் நிச்சயம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும், 500 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என கூறப்படுகிறது.
