சூப்பர் ஸ்டார் படத்தில் இருந்து விலகிய தயாரிப்பு நிறுவனம்.. ரஜினி, அஜித்தால் திவால் ஆகிறதா?
Author: Udayachandran RadhaKrishnan18 March 2025, 12:16 pm
சினிமாவில் உள்ள உச்ச நட்சத்திரங்களின் படங்களை தயாரிக்க தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு முன்வருவார்கள்.
ஆனால் இப்போதைய கால சினிமாவில் அதெல்லாம் தவிடுபொடியாக்கியது சின்ன சின்ன பட்ஜெட் திரைப்படங்கள். முன்பெல்லாம் பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்தால் கூட்டம் அலைமோதும்.
இதையும் படியுங்க: பேரனோட படிப்பு போச்சு.. தனுஷை மேடையில் கிழித்தெடுத்த தந்தை கஸ்தூரி ராஜா!
பல மாதங்கள் திரையில் இருந்து வெளியே செல்லாது. ஆனால் இந்த காலத்தில் பணத்தை வாரி இறைத்து பிரம்மாண்டமாக படம் எடுத்தாலும், சல்லிக் காசுக்கு பிரயோஜனம் இல்லாமல் போய்விடுகிறது.
அப்படித்தான் ஒரு தயாரிப்பு நிறுவனம் இலங்கையில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் கனவுகளோடு நுழைந்தது. அது வேறு யாருமில்லை லைகா நிறுவனம் தான்.
கத்தி என்ற மாபெரும் ஹிட் படம் மூலம் என்ட்ரி கொடுத்த லைகா, அடுத்தடுத்து சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த படமும் ஓடவில்லை. சிவகார்த்திகேயனின் டான், பொன்னியின் செல்வன் படம் ஓரளவு வசூலை கொடுத்தது.

ஆனால் தொடர்ச்சியாக வேட்டையன், இந்தியன் 2, விடாமுயற்சி என மாஸ் ஹீரோக்களை வைத்து படம் தயாரித்த லைகா பாதாளத்துக்கு சென்றது. எந்த படமும் வசூல் ரீதியாக வெற்றியை தரவில்லை.
இதையடுத்து கடனில் தவிக்கும் லைகா மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாகும் எம்புரான் படத்தை தயாரிக்க முன்வந்தது. ஆனால் என்ன பிரச்சனை நடந்ததோ தற்போது பின் வாங்கியுள்ளது.
தற்போது விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை மட்டும் தயாரிக்கும் லைகா, இனி படத்தை தயாரிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.