காதல் கணவருடன் கருத்து வேறுபாடு? திருமணமான ஒரே வருடத்தில் பிரபல நடிகரின் மகள் எடுத்த முடிவு?!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2025, 4:37 pm

திருமணமான பிரபலங்கள் விவாகரத்து செய்து வருவது சினிமாத்துறையில் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இது அதிகரித்து வருவதுதான் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க : 25வது நாளை கடந்த ‘டிராகன்’.. தியேட்டரில் வசூல் ஆட்டம்..!

இந்த நிலையில் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய பாலிவுட் முன்னணி நடிகர் அமீர்கான், தனது 3வது காதலியை அறிமுகம் செய்தார். 18 மாதங்களாக கௌரிஸ் ஸ்பிராட் என்பவரை காதலிப்பதாகவும் கூடிய விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக கூறினார்.

Aamir Khan Daughter divorce Rumours

ஏற்கனவே அமீர்கானுக்கு ரீனா தத் மற்றும் கிரண் ராவ் என இருவரை திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டார். தற்போது 3வதாக கௌரிஸ் ஸ்பிராட்டை திருமணம் செய்ய உள்ளது பேசுபொருளாகியுள்ளது.

இதனிடையே கடந்த திங்கட்கிழமை தந்தையை காண வந்த மகள் இரான் கான், காரில் கண் கலங்கியபடி திரும்பி சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பல்வேறு சந்தேகங்களை கிளப்பி வருகிறது.

Aamir Khan Daughter Ira khan cried at her car Photos Viral

கடந்த வருடம் ஜனவரி மாதம்தான் மகளுக்கு அவருடைய காதலனை திருமணம் செய்து வைத்திருந்தார் அமீர்கான். தற்போது மகள் அழுது கொண்ட புகைப்படம் வைரலாகி வருவதால், காதல் கணவருடன் மனக்கசப்பா? இல்லை வேறு ஏதேனும் பிரச்சனையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • Dragon Movie OTT Release OTT-யில் ‘டிராகன்’..அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
  • Leave a Reply