பப்ளிக் எக்ஸாம் எழுத வந்த மாணவியிடம் Bad Touch செய்த அரசுப் பள்ளி ஆசிரியர்.. தேர்வறையில் கொடூரம்!

Author: Hariharasudhan
19 March 2025, 12:51 pm

கிருஷ்ணகிரியில், 12ம் பொதுத்தேர்வு அறையில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தவர் 17 வயது மாணவி. இவர் நேற்று (மார்ச் 18) கிருஷ்ணகிரி – திருவண்ணாமலை சாலையில் உள்ள அஞ்சூர் – ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடந்த உயிரியல் தேர்வினை எழுதச் சென்றுள்ளார்.

அப்போது, அந்த மாணவி தேர்வு எழுதிய அறையின் மேற்பார்வையாளராக வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும், போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (44) என்பவர் பணியில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், தேர்வு எழுதிக் கொண்டிருந்த 17 வயது மாணவியின் உடலில் ஆசிரியர் ரமேஷ் கை வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி செய்வதறியாமல் திகைத்துள்ளார். இதன் காரணமாக, அந்த மாணவியால் தேர்வையும் சரிவர எழுத முடியவில்லை. பின்னர், தேர்வு முடிந்த பின் வெளியே வந்த அந்தச் சிறுமி, மிகவும் சோகத்துடன் காணப்பட்டுள்ளார்.

Sexual abuse

இதனைப் பார்த்த சிறுமியின் பள்ளி முதல்வர், ஏன் சோகமாக இருக்கிறாய்? தேர்வு சரியாக எழுதவில்லையா எனக் கேட்டுள்ளார். அதற்கு, தேர்வு அறையில் தன்னிடம் ஆசிரியர் ரமேஷ் நடந்து கொண்ட சம்பவம் குறித்து கூறி அழுதுள்ளார் மாணவி. அதேபோல், அதே அறையில், அதே பள்ளியைச் சேர்ந்த தேர்வு எழுதிய மாணவி ஒருவரும், தன்னிடமும் அவ்வாறு ஆசிரியர் ரமேஷ் நடந்து கொண்டதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 2 குழந்தைகளை கால்வாயில் தள்ளிவிட்ட தந்தை.. அழுத சிறுவன்.. நெஞ்சை உருக்கும் சம்பவம்!

இதனையடுத்து, அந்தப் பள்ளியின் முதல்வர் இது குறித்து, அந்தத் தேர்வு மையத்தின் பொறுப்பாளரான மேகலசின்னம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் மற்றும் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில், போலீசார் ஆசிரியர் ரமேஷை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Vijay and Nizhalgal Ravi reunion விஜய்க்கு அப்பாவாக நடிக்கும் பிரபல ஹீரோ…25 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஜனநாயகன்’ படத்தில் என்ட்ரி.!
  • Leave a Reply